சென்னை: பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய திறன் மையங்களை அமைப்பதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு அலுவலக இடங்களை மேம்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு தொழில்துறை செயலாளர் அருண் ராய் அளித்த பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
தற்போது பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் தங்களுடைய திறன் மையங்களை அமைப்பதற்கு விருப்பமான இடமாக சென்னையை தேர்வு செய்து வருவதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நிறுவனங்களுக்கு அலுவலக இடம் அமைப்பதில் எந்த பிரச்சனையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு கவனத்துடன் இருப்பதாக அருண் ராய் கூறியுள்ளார். அரசு தன்வசம் இருக்கும் நிலங்களை தனியார் பங்களிப்போடு அலுவலக கட்டடங்களாக மேம்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கிரேடு ஏ தரத்திலான அலுவலக இடங்களை அமைப்பதற்காக 30 இடங்களை தேர்வு செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் மற்றும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகமான டிட்கோ ஆகிய இரண்டும் இணைந்து மெட்ரோ நிலையங்களுக்கு அருகிலேயே 30 இடங்களை கண்டறிந்து இருப்பதாக கூறியுள்ளார்.
இந்த இடங்கள் அலுவலக கட்டிடங்களாக மேம்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். சென்னையில் தற்போது அலுவலக இடங்களுக்கான சப்ளையை விட டிமாண்ட் அதிகமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ள அவர் அரசு இதற்காக தன்வசம் இருக்கும் நிலங்களையே வழங்க முன் வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில் சென்னையில் அலுவலக இடங்களுக்கான தேவை 10 . 8 மில்லியன் சதுர அடியாக இருந்தது, வரும் ஆண்டில் இது இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஜிசிசி மையங்கள் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தொழில் துறை செயலாளர் ஜிசிசி மையங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கொண்ட நகரமாக சென்னை இருக்கிறது என்றார். பல்வேறு பொருளாதார வளர்ச்சி குறியீடுகளில் தமிழ்நாடு முன்னிலை வகித்தாலும் ஜிசிசி எனப்படும் சர்வதேச திறன் மையங்களை அமைப்பதில் தமிழ்நாடு பின் தங்கி இருக்கிறது என கூறினார்.
பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் ,டெல்லி, புனே ஆகிய நகரங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாடு பின் தங்கி இருக்கிறது எனவும், நாட்டில் தற்போது 1800 ஜிசிசி மையங்கள் உள்ளன, அதில் 250 மட்டுமே தமிழ்நாட்டில் இருக்கிறது என சுட்டி காட்டிய அவர் ஏதோ ஒரு விஷயத்தில் தமிழகம் தவற விட்டுள்ளது என தெரிவித்துள்ளார். எனவே ஜிசிசி அமைப்பதிலும் செயல்பாட்டிலும் மாநில அரசு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.
முன்னதாக சிபிஆர்இ சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் ஜிசிசி மையங்களுக்கான அலுவலக இடங்களில் லீசுக்கு விடுவதில் பெங்களூரு முதலிடத்திலும் ஹைதராபாத் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது சென்னை மூன்றாவது இடத்தில் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நிறுவப்பட்டுள்ள ஜிசிசி மையங்களில் 33 சதவீதம் பொறியியல் மற்றும் உற்பத்தி துறை சார்ந்தது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications