சென்னை: பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் ஜிசிசி எனப்படும் குளோபல் கெபாபிலிட்டி சென்டர்கள் (GCC - Global Capablity Centers)அதாவது தங்களின் பன்னாட்டு திறன் கிளைகளை இந்தியாவில் நிறுவ ஆர்வம் காட்டி வருகின்றன.
பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய நிறுவன செயல்பாடுகளான பேக் ஆபீஸ் ஃபங்க்ஷன் , ஐடி அசிஸ்டன்ஸ் மற்றும் கஸ்டமர் ரிலேஷன்ஷிப் உள்ளிட்டவற்றை செயல்படுத்த இந்த மையங்களை பயன்படுத்துகின்றன. இந்தியாவில் தங்களுடைய ஜிசிசி மையங்களை நிறுவ பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களை முதன்மையாக தேர்வு செய்கின்றன. இதற்கு அடுத்த இடத்தில் சென்னை இருக்கிறது.

அண்மை காலமாக பன்னாட்டு நிறுவனங்களின் விருப்பமான ஜிசிசி மையங்களாக தமிழ்நாடு மாறி வருகிறது. இந்த நிலையில் தான் தமிழ்நாடு அரசு சென்னை மட்டுமில்லாமல் கோயமுத்தூர், மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களையும் ஜிசிசி மையங்களுக்கான நகரமாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதுபோல ஜிசிசி மையங்கள் அமையும் போது ஐடி துறை சார்ந்த மற்றும் நிதித்துறை சார்ந்த நிபுணர்கள் பலருக்கும் பல மடங்கு சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
ஜிசிசி மையங்கள் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் அமைக்கப்படுகிறது என்பது அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கான ஒரு அந்தஸ்தாகவும் பார்க்கப்படுகிறது. ஐடி, நிதி, பொறியியல் மற்றும் சுகாதாரம் ஆகிய பிரிவுகளில் செயல்படக்கூடிய பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே இந்தியாவில் தங்களுடைய பன்னாட்டு திறன் கிளைகளான ஜிசிசி மையங்களை பெருமளவில் அமைத்து வருகின்றன.
தமிழ்நாடு இவர்களின் முக்கியமான விருப்பமான இடமாக மாறி இருப்பதற்கு இங்கே இருக்கக்கூடிய தகவல் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் வல்லுநர்கள் , திறன் மிகு ஊழியர்களே காரணம் எனலாம். ஜிசிசி மையங்கள் அமைப்பதற்கு தேவையான உள்கட்டமைப்புகளை கொண்ட மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.
தமிழ்நாட்டினை பொறுத்தவரை சென்னை மிகப்பெரிய ஜிசிசி மையமாக இருக்கிறது. பார்க்கலைஸ், ஸ்டாண்டர்ட் சார்ட்டட், அமேசான், அஸ்ட்ராஸென்கா என பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஜிசிசி மையங்கள் சென்னையில் செயல்படுகின்றன. அடுத்ததாக கோயம்புத்தூரை பொறுத்தவரை 25 ஜிசிசி மையங்கள் செயல்படுகின்றன. இது தவிர சேலம் ,வேலூர், மதுரை திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் ஜிசிசி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய நான்கு நகரங்களையும் ஜிசிசி மையங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை கையில் எடுத்திருக்கிறது. இதற்கு ஏற்ற வகையில் இந்த நான்கு நகரங்களிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. எனவே அடுத்த சில ஆண்டுகளில் இந்த நகரங்களில் ஜிசிசி மையங்கள் மூலம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றன.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications