தமிழ்நாடு அரசு தமிழ் மொழியின் டிஜிட்டல் வளர்ச்சியை ஊக்குவிக்க ஒரு முக்கியமான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தமிழ் மொழி தொழில்நுட்பத்தில் (LangTech) புதுமையான ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஆதரித்து வேகமாக வளர்ச்சி அடைய செய்ய ரூ.2.5 கோடி நிதியை உருவாக்கியுள்ளது. இந்த நிதியுதவி யாருக்கு கிடைக்கும்..?
இயற்கை மொழி செயலாக்கம் (NLP) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றைப் பயன்படுத்தி தமிழ் மொழிக்கான் லாங்குவேஜ் மாடல்களை உருவாக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இந்த நிதி உதவி கிடைக்கும்.
தமிழ் விர்ச்சுவல் அகாடெமி (TVA) மற்றும் Startup TN ஆகியவை இணைந்து சிறப்பு நிதியுதவி திட்டத்தை செயல்படுத்துகின்றன. இது தமிழின் டிஜிட்டல் இருப்பை வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாகும்.

இத்திட்டத்தின் நோக்கங்கள்
இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம் என்னவென்றால் தமிழ் மொழியை AI மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்ப பயன்பாட்டில் முன்னணியில் கொண்டு வருவதாகும். மேலும் இத்திட்டம் மூலம் உலகத் தரம் வாய்ந்த தமிழ் AI கருவிகளை உருவாக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கி, வழிகாட்டி மற்றும் உலகளாவிய கவனம் வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசின் இந்த முயற்சி தமிழை டிஜிட்டல் உலகில் பாதுகாக்கவும், புதிய தொழில்நுட்பங்களில் வளர்ச்சி அடையச் செய்யவும் இத்திட்டம் பெரியளவில் உதவும். ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தமிழை அடிப்படையாக கொண்டு லார்ஜ் லாங்குவேஜ் மாடல்கள் (LLMs), மெஷின் டிரான்ஸ்லேஷன், சாட்பாட் டூல்ஸ், Speech Recognition, Text Mining, Paraphrasing Tools போன்ற டூல்களை உருவாக்கலாம்.
யார் விண்ணப்பிக்கலாம்
இந்த 2.5 கோடி ரூபாய் நிதியை பெற Startup TN அல்லது Startup India இல் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவை. தமிழ் மொழி தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

என்ன நன்மை?
இதில் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களுக்கு சம அளவு முதலீடு அல்லது மானியங்கள் வழங்கப்படும். இந்த முதலீடு ப்ராடெக்ட் வளர்ச்சி மற்றும் அறிவுசார் சொத்து (IP) உருவாக்கத்துக்கு உதவும். மேலும், AI மற்றும் தொழில்துறை நிபுணர்களிடமிருந்து வழிகாட்டுதல் கிடைக்கும்.
விண்ணப்ப செயல்முறை
விண்ணப்பங்கள் தமிழ் விர்ச்சுவல் அகாடெமி மற்றும் Startup TN இணையதளங்கள் வழியாக ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் ஜனவரி 7ஆம் தேதி.
சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் தேர்வு இரு சுற்றுகளில் நடக்கும் - முதலில் முதலீடு குழு தகுதி மற்றும் இன்னோவேஷனை ஆராயும், பின்னர் திட்ட அனுமதி குழு இறுதி முடிவு எடுக்கும்.
விண்ணப்பிக்கும் முறை
இந்தத் திட்டத்தில் பங்கு பெற விரும்பும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் https://forms.gle/4ejrbJqDAfZ8h4BRA என்ற இணைப்பு வழியாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் அல்லது 044-22209400 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த முயற்சி தமிழ் மொழியின் தொழில்நுட்ப எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கியமான வாய்ப்பாகும்.
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications