முத்து முத்தா 8 இடத்தில் புதிய SIPCOT தொழிற்பூங்கா.. எங்கெல்லாம் வருது தெரியமா..?

தமிழ்நாடு அரசின் முயற்சிகள் மூலம் தொடர்ந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளை ஈர்த்து வரும் நிலையில், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு அமைப்பான SIPCOT மாநிலம் முழுவதும் 8 இடங்களில் 4,000 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்காக்களை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை வெளியான அறிவிப்பின் படி சுமார் 11000 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த 8 புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த சிப்காட் மூலம் குறைந்தது 1,07,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கணிக்கிடப்பட்டு உள்ளது.

முத்து முத்தா 8 இடத்தில் புதிய SIPCOT தொழிற்பூங்கா.. எங்கெல்லாம் வருது தெரியமா..?

புதிய தொழில் பூங்காக்கள் திருவள்ளூர், தூத்துக்குடி, அரியலூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் T R B ராஜா சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த 8 சிப்காட் தொழிற்பூங்காவில் மிகப்பெரியது சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டியில் 1,500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுவது தான். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் அமைந்துள்ள ஒட்டப்பிடாரத்தில் 1,000 ஏக்கர் பரப்பளவில் 2வது பெரிய சிப்காட் அமைக்கப்படும்.

இந்த புதிய 8 சிப்காட் தொழிற்பூங்காக்கள், தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்த 21 புதிய SIPCOT பூங்காவுக்கு கூடுதலாகும். 21,404 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், SIPCOT தனியார் துறையின் இணைந்து துறை சார்ந்த் ஸ்பெஷல் சிப்காட் தொழிற்பூங்காக்களை அமைக்க உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் 40,839 ஏக்கர் பரப்பளவில் 7 SEZ கள் உட்பட 40 தொழில் பூங்காக்களை SIPCOT ஏற்கனவே அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்களின் பட்டியல்:

கும்மிடிப்பூண்டி, சென்னை - 1,500 ஏக்கர்
ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி - 1,000 ஏக்கர்
ஸ்ரீபெரும்புதூர் - 750 ஏக்கர்
சென்னை ORR - 200 ஏக்கர்
திருவெறும்பூர், திருச்சி - 150 ஏக்கர்
அரியலூர் - 150 ஏக்கர்
மன்னார்குடி - 150 ஏக்கர்
பெரம்பலூர் - 100 ஏக்கர்

புதிய தொழில் பூங்காக்கள் தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+