சாமானிய மக்கள் மருந்து பொருட்களை வாங்குவதற்கு எந்த வித சிரமமும் படக்கூடாது என்பதற்காக முதல்வர் மருந்தக திட்டத்தை தொடங்கயிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி கோவையில் முதல்வர் மருந்தகம் திட்டத்தின் கீழ் 37 மருந்தகங்கள் தொடங்க விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2025-ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகையின் போது இந்த மருந்தகங்கள் தொடங்கப்படும் என்றும் மாநில அரசு அறிவித்திருக்கிறது. தற்போது இந்த மருந்தகங்களை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பொதுமக்கள் குறைந்த விலையில் தங்களுக்கு தேவைப்படும் மருந்துகளை வாங்க வேண்டும் என்பதற்காக முதல்வர் மருந்தகத் திட்டத்தின் கீழ் 1000 மருந்தகங்கள் திறக்கப்படும் என சுதந்திர தின உரையின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து மருந்தகங்களை தொடங்க கூட்டுறவு துறைக்கு விண்ணப்பங்கள் வரத் தொடங்கின. அதன்படி கோவை மாவட்டத்திலும் குறைந்த விலையிலான மருந்துகளை விற்பனை செய்ய மருந்தகங்கள் அமைக்கப்பட இருந்தது. இந்த திட்டத்தில் ஈடுபட்ட தொழில் முனைவோராக மாற பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முதல்வர் மருந்தகத் திட்டத்தின் கீழ் மருந்தகங்களை தொடங்க கோவை மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 61 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் 22 விண்ணப்பங்கள் ஏற்கனவே உள்ள கூட்டுறவு சங்கங்களிலிருந்தும் மீதமுள்ள விண்ணப்பங்கள் தனி நபர்களிடம் இருந்தும் பெறப்பட்டன. இதில் 15 தனி நபர் விண்ணப்பங்கள் உட்பட 37 விண்ணப்பங்களை கூட்டுறவுத்துறை பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு மருந்தகம் அமைக்க தேர்ந்தெடுத்துள்ளது.
மருந்துகள் எங்கிருந்து பெறப்படும்?: தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறை மற்றும் கூட்டுறவுத்துறை போன்ற மாநில அளவிலான துறைகள் இணைந்து மருந்தகங்களை திறக்க அனுமதி வழங்கவுள்ளது. அதோடு தமிழ்நாடு மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் முதல்வர் மருந்தகத் திட்டத்திற்கு தேவையான ஜெனரிக் மருந்துகளை தயாரித்து வழங்க இருக்கிறது. பிற மருந்துகள் மற்றும் மருத்துவம் சார்ந்த உபகரணங்கள் அனைத்தும் தமிழ்நாடு கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் கொள்முதல் செய்யப்பட்டு முதல்வர் மருந்தகத் திட்டத்தின் கீழ் செயல்படும் மருந்தகங்களுக்கு அனுப்பப்படும்.
கூட்டுறவுத் துறையின் அதிகாரி ஒருவர் கூறுகையில் டி-ஃபார்ம் மற்றும் பி-ஃபார்ம் போன்ற படிப்புகளை முடித்தவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், மருந்தகம் அமைக்க விரும்புபவர்கள் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறலாம் என்றும் கூறியுள்ளார்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு மருந்து உரிமம், சில்லறை விற்பனை உரிமம், FSSAI சான்றிதழ் போன்ற மருந்தகத்தை நடத்துவதற்கு தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் ஒருவர் பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு மானியமாக 3 லட்ச ரூபாய் வரை வழங்கப்படு.ம் இதில் 50% மருந்தகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரொக்க பணமாகவும், மீதமுள்ள 50% மருந்து விற்பனைக்காகவும் வழங்கப்படுகிறது. முதல்வர் மருந்தகத் திட்டத்தின் கீழ் மருந்தகங்களை தொடங்குவதற்கு இன்னும் சில விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications