தமிழ்நாட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் தொழிற்துறை பகுதியாக இருக்கும் ஒசூரில் விமான நிலையம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் நிராகரித்துள்ளது. பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பல் இந்த வான்பரப்பு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்திற்கு தேவை இருக்கும் காரணமாக இந்த திட்டத்திற்கு மறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு முன்மொழிந்த இரு இடங்களை பாதுகாப்பு அமைச்சகம் ஏற்கவில்லை. தமிழ்நாடு அரசு கிருஷ்ணகிரி-ஒசூர் நெடுஞ்சாலையில் உள்ள சூளகிரி தாலுகாவில் பேரிகை மற்றும் பாகலூர் இடையே ஒரு இடமாக பரிந்துரைத்தது. மற்றொன்று ஒசூர் நகருக்கு கிழக்கே 15.5 கி.மீ தொலைவில் உள்ள தனேஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் லிமிடெட் (TAAL) விமான நிலையத்திற்கு அருகில் உள்ளது.

ஒசூர் நகரம் சிறியதாக இருப்பதால் மாற்று இடங்களை கண்டறிவது கடினம் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே தமிழ்நாடு அரசு தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் தமிழ்நாடு அரசு பாதுக்காப்பு அமைச்சகத்தின் முடிவை எதிர்த்து இந்த விமான நிலையம் ஓசூர் வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் விளக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூர் விமான நிலையத்திற்கு 150 கி.மீ தொலைவுக்குள் புதிய விமான நிலையம் அமைக்க 2033 வரை தடை உள்ளது என்ற சட்ட விதி ஒரு தடையாக இருந்தது. ஆனால் அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒசூரில் விமான நிலையம் அமைக்க குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும் என்பதால் இந்த தடை தற்போது பிரச்சினையாக இருக்காது என்றார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்த மறுப்பு அரசியல் பிரச்சினையாகவும் பார்க்கப்படுகிறது என ஹிந்து தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு மூன்று மாதங்களே உள்ள நிலையில், இது பெரிய அரசியல் சர்ச்சையாக மாறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு கடந்த ஒரு மாதமாக பரந்தூர் மற்றும் ஒசூர் ஆகிய இரு விமான நிலைய திட்டங்களை விரைவாக செயல்படுத்த முயன்று வருகிறது. சென்னை-பெங்களூர் இடைவெளியில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க இந்த திட்டங்கள் மிக முக்கியமானவை. பாதுகாப்பு அமைச்சகத்தின் மறுப்பு இந்த முயற்சிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.

ஒசூர் தமிழ்நாட்டின் முக்கிய தொழிற்துறை நகரமாக வளர்ந்து வரும் நிலையில், விமான நிலையம் அமைவது இந்நகர பொருளாதாரத்திற்கும் தொழில் வளர்ச்சிக்கும் பெரும் உதவியாக இருக்கும். மேலும் ஓசூர், சென்னை போலவே உற்பத்தி + ஐடி சேவை துறையில் வளர்ச்சி அடைய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு ஓசூரில் விமான நிலையம் அமைக்க இந்த திட்டத்தை கைவிடாமல் மாற்று வழிகளை ஆராய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications