தமிழ்நாட்டின் பொருளாதாரம், நிதி நிலை ஆகிய அனைத்தும் கடந்த 2 வருடத்தில் மிகப்பெரிய மாற்றத்தையும் வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. கடன் அளவை குறைத்தது முதல் தனி நபர் வருமானத்தில் பதிவான உயர்வு வரையில் பல இடத்தில் நிதியியல் அடிப்படையில் தமிழ்நாடு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து CAG அமைப்பு ரிப்போர்ட் வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டின் நிதியமைச்சராக இருந்த PTR பழனிவேல் தியாராஜன் அவர்களை நீக்கிவிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை இப்பதவியில் நியமிக்கப்பட்ட நிலையில் CAG அறிக்கை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

2022-23 நிதியாண்டில் தமிழ்நாடு அரதின் மொத்த வருவாய் 17.54 சதவீதம் அதிகரித்துள்ளது என்று இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) வெளியிட்ட தரவுகளில் தெரிவித்துள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டின் மொத்த வருவாய் 2021-22 நிதியாண்டில் பதிவான ரூ.2.08 லட்சம் கோடியில் இருந்து 2022-23ஆம் ஆண்டில் மொத்த வருவாய் ரூ.2.42 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ரூ.2.42 லட்சம் கோடி மொத்த வருவாயில், வரி வருவாய் அளவு 17.85% அதிகரித்துள்ளது, தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வரி அளவு 18.88% அதிகரித்துள்ளது, மதுபானம் மற்றும் எரிபொருள் விற்பனை மூலம் கிடைக்கும் வரி வருவாய் 21.52 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட்டின் 2022 பட்ஜெட் வருவாய் இலக்குகளை 108.59% தாண்டியது. CAG ரிப்போர்ட் வந்த நாளில் தான் PTR பழனிவேல் தியாகராஜன் அவர்களின் நிதித்துறை இலாகாவை நீக்க தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது.
கடந்த ஆண்டு தான் கொரோனா தொற்று இல்லாத முதல் ஆண்டு என்பதால் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களின் நிதியியல் அளவுகள் வளர்ச்சி பாதையில் உள்ளது. 2021-22 ஆம் நிதியாண்டில் கொரோனா காரணமாக தமிழ்நாடு அரசின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது, இதேபோல் ரேஷன் கார்டு அடிப்படையில் மக்களுக்கு 4000 ரூபாய் அளிக்கப்பட்டது. இது வருவாய் மற்றும் செலவுகள் அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆனால் 2022-23 ஆம் நிதியாண்டில் இதுப்போன்ற பிரச்சனைகள் எதுவம் இல்லை, இதனால் 56,479 கோடி ரூபாய் மதிப்பிலான செலவுகள் திட்டத்திற்கு, தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 27,549 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது.


Click it and Unblock the Notifications