ஏற்கனவே தமிழ்நாட்டில் மொழி தொடர்பான விவாதம் நடந்து வரும் வேளையில், தமிழ்நாடு அரசு தனது மாநில பட்ஜெட்டிற்கான லோகோவில் இந்திய ரூபாய் சின்னமான "₹" என்பதை தமிழ் எழுத்தான "ரூ"-வைக் கொண்டு மாற்றி அமைத்துள்ளது. தமிழ்நாடு ஆரம்பத்திலிருந்து ஹிந்தி மொழி திணிப்பை எதிர்த்து போராடி வருகிறது. இதற்கு முன்னர் இதனால் பல போராட்டங்கள் நடந்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2025 முதல் 2026-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நாளை தாக்கல் செய்யவுள்ளார். இதற்கு முன்னதாக தனது X பதிவில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் "தமிழ்நாடு பட்ஜெட் 2025-2026.. எல்லோருக்கும் எல்லாம்" என்ற ஒரு வாசகத்துடன் கூடிய பட்ஜெட் லோகோ இடம்பெற்றிருந்தது. அதில் இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட "₹" என்ற ரூபாய் சின்னத்திற்க்கு பதிலாக தமிழ் எழுத்தான "ரூ" இடம் பெற்றிருந்தது. கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட் அறிக்கையில் வழக்கமான ரூபாய் சின்னம்தான் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இந்தியாவில் 22-க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. அவற்றுள் தமிழும் ஒன்று. ரூபாய் நாணயத்தில் தேவநாகரி எழுத்தான र என்பது இடம் பெற்றிருக்கும். இது ரோமன் லெட்டர் R-லிருந்து வந்த ஒரு எழுத்தாகும்.
தற்போது லோகோவில் "ரூ" என்பதை மாற்றியதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த உதயகுமார் என்ற நபர் வடிவமைத்த "₹" சின்னம்தான் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதை மாற்றிவிட்டு இப்படி செய்வது முட்டாள்தனம் என்று ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். உதயகுமார் முன்னாள் திமுக எம்எல்ஏவின் மகன் என்பது குறிப்பிடப்பட்டது.
புதன்கிழமை அன்று மு.க.ஸ்டாலின் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் தேசிய கல்விக் கொள்கை (NEP) குறித்த கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். தமிழ்நாட்டின் கல்வி தேவைக்கு முன்னுரிமை வழங்காமல் இந்திக்கு முன்னுரிமை வழங்குவது எந்த விதத்தில் நியாயம்? இது தேசிய கல்விக் கொள்கை அல்ல மாறாக காவிமயமாக்கப்பட்ட கொள்கை என்று சாடினார். NEP மாநிலத்தின் கல்வி முறையை சீர்குலைக்கும் என்றும் கவலை தெரிவித்தார்.
இந்த ரூபாய் சின்னம் மாற்றமும், தேசிய கல்விக் கொள்கை குறித்த விவாதமும் தமிழ்நாட்டில் மொழி அரசியலை மீண்டும் ஒருமுறை தீவிரமாக்கியிருக்கிறது. ஒவ்வொரு தரப்பும் தங்கள் நியாயங்களை முன்வைத்து வாதிட்டாலும், இறுதியில் மக்களின் நலனே முக்கியம். மொழி உணர்வுகள் மதிக்கப்பட வேண்டியவை என்றாலும், கல்வி மற்றும் வளர்ச்சிக்கு இடையூறு இல்லாத வகையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் அனைவரின் கருத்தாக உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications