இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்குகிறது. தமிழ்நாடு அரசின் கொள்கை கட்டமைப்பு, தொழிலாளர் சக்தி வாயிலாக $1 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடைய முடியும் என இந்திய முதலீட்டாளர்கள் முதல், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம்பும் வகையில் தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு அமைந்துள்ளது.
இன்றைய கூட்ட நிறைவில் தமிழ்நாடு அரசு பல நாடுகள், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களிடம் சுமார் 300 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாள் கூட்டத்தில் சுமார் 50000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்குக் கையெழுத்தான நிலையில், இன்று நடக்கும் 300 MoU மூலம் தமிழ்நாடு பெரும் முதலீடு புதிய உச்சத்தை அடைய உள்ளது.
தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் நடத்தப்படும் முதலீட்டாளர்கள் மாநாட்டின் முக்கியப் பிரச்சனையே, ஒப்பந்தம் செய்யப்படும் முதலீடுகளில் பாதிகூட வெற்றி அடையாது என்பது தான்.

ஆனால் TNGIM 2024 துவங்கும் போதே தமிழகத் தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா இக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் முதலீடுகளில் குறைந்தபட்சம் 70 முதல் 80 சதவீதம் வெற்றி அடையும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளையும், ஏற்பாடுகளையும் முன்கூட்டியே திட்டமிட்டு உள்ளதாக ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை துவங்கிய நிலையில் 2வது நாள் கூட்டத்திற்குச் சென்னையைச் சுற்றியுள்ள கல்லூரி மாணவர்கள் அதிகமாகக் காலையில் இருந்து வருகின்றனர்.
இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான மக்களை அதிகளவில் ஈர்த்த பகுதியாக ஸ்டார்ட்அப் அரினா விளங்குகிறது. கல்லூரி மாணவர்கள் முதல், தொழில்முனைவோராக உயர வேண்டும் எனத் திட்டமிடுபவர்கள் என அனைத்து தரப்பினரையும் ஸ்டார்ட்அப் வளாகம் ஈர்த்துள்ளது.
2வது நாள் கூட்டத்தில் முக்கிய விஷயமாகத் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்ட கலந்துரையாடல் கூட்டத்தைக் காண மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்தனர். அரங்கம் முழுவதும் நிரம்பிய காரணத்தால் கதவுகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2வது கூட்டத்தில் முதல் கட்டமாக ஆரம்பமே அதிரடி என்ற வகையில் டாடா பவர் மற்றும் டைட்டன் ஆகிய இரு நிறுவனங்கள் மெகா முதலீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது. டாடா பவர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரவீர் சின்ஹா கூறுகையில் TNGIM கூட்டத்தின் ஒரு பகுதியாக நாங்கள் ரூ.70,000 கோடி முதலீடு செய்ய உள்ளோம், இந்த முதலீடு அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் நடக்கும் எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து டாடா குழுமத்தின் டைட்டன் நிறுவனத்தின் சொந்த துணை நிறுவனமான டைட்டன் இன்ஜினியரிங் & ஆட்டோமேஷன் லிமிடெட் (TEAL) ஓசூரில் 430 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இதில் 200 கோடி ரூபாயை செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யச் சிலிக்கான் வேஃபர் டேப் உபகரணங்களை உற்பத்தி செய்யும் வசதிக்காகச் செய்யப்படும். மீதமுள்ள 230 கோடி நிறுவனம் ஆட்டோமேஷன் மற்றும் உற்பத்தி சேவைகளுக்காக முதலீடு செய்யப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications