இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் எந்த மாநிலத்தில் அதிக பணக்கார குடும்பங்கள் இருக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வில் வியப்பு அளிக்கும் வகையில் தொழில்நகரமான மும்பையை தொடர்ந்து அதிகப்படியான பணக்கார குடும்பங்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்.
இந்தியாவில் பல விஷயங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக இருக்கும் வேளையில் பணக்காரர்களை அதிகம் கொண்டுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 2வது இடத்தில் இருப்பது மிகவும் முக்கியமான விஷயம். இதுமட்டும் அல்லாமல் பொருளாதார அடிப்படையிலும் மும்பைக்கு அடுத்து தமிழ்நாடு தான் இருக்கிறது.

சமீபத்தில் PRICE என்ற அமைப்பு இந்தியாவின் நடுத்தர மக்கள் குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டது, இந்த ஆய்வில் நாட்டின் 10 மாநிலங்களில் மட்டுமே சுமார் 80 சதவீத பணக்கார குடும்பங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் முதல் இடத்தில் இருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் சுமார் 2.62 மில்லியன் பணக்கார குடும்பங்கள் உள்ளது. 2.62 மில்லியன் எனில் 26.2 லட்சம் பேர்.
இந்தியாவில் அதிக பணக்கார குடும்பங்கள் இருக்கும் மாநிலத்தில் வர்த்தக தலைநகரான மும்பை இருக்கும் மகாராஷ்டிரா முதல் இடத்தை பிடித்த நிலையில், தமிழ்நாடு 0.9 மில்லியன் அதாவது 9 லட்சம் பணக்கார குடும்பங்களை கொண்டு 2வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
பஞ்சாப்-ல் 5.73 லட்சம் பணக்கார குடும்பங்கள், ஹரியானாவில் 4.55 லட்சம் பணக்கார குடும்பங்கள், குஜராத்தில் 7.99 லட்சம் பணக்கார குடும்பங்கள், கர்நாடகாவில் 6.58 லட்சம் பணக்கார குடும்பங்கள், ஆந்திர பிரதேசத்தில் 3.48 லட்சம் பணக்கார குடும்பங்கள், மேற்கு வங்காளத்தில் 6.12 லட்சம் பணக்கார குடும்பங்கள், உத்தர பிரதேசத்தில் 8.10 லட்சம் பணக்கார குடும்பங்கள், டெல்லியில் 7.42 லட்சம் பணக்கார குடும்பங்கள் பணக்காரர்களாக உள்ளனர். பணக்காரர்களின் அளவுகோல் என்ன..?

இந்த ஆய்வை செய்த People Research on India's Consumer Economy (PRICE) அமைப்பு 1.25 ரூபாய்க்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களை Destitute என்ற பிரிவிலும், 1.25 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான ஆண்டு வருமான கொண்ட குடும்பங்களை Aspirer என்ற பிரிவிலும், 5 லட்சம் முதல் 30 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களை மிடில் கிளாஸ் ஆகவும், 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் கொண்டவர்களை பணக்காரர்கள் என பிரிக்கிறது.
இப்படி 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை 2015-16 ஆம் நிதியாண்டில் இருந்து 2020-21 வரையிலாக காலக்கட்டத்தில் 10.1 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications