தமிழ்நாடு வீட்டு வாரியத்தின் அனைத்து சேவைகளும் அன்லைன்-க்கு மாற்றப்பட வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் முக்கியமாக தமிழ்நாடு முழுவதும் விற்பனை ஆகாமல் இருக்கும் அடுக்கமாடி குடியிருப்புகள் மற்றும் காலி மனைகளின் விபரங்களும் ஆன்லைனுக்கு கொண்டு வந்து மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உத்தரவுகள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அனைத்து துறையிலும் வெளிப்படை தன்மையை மேம்படுத்தும் நோக்கில் புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. இதில் முக்கியமாக சிறு சிறு கான்டிராக்ட் கூட இனி ஆன்லைன் வாயிலாக பொது ஏலம் முறையில் தான் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தவும் துவங்கியுள்ளது.

தமிழ்நாடு ஹவுசிங் போர்டு நிர்வாகம் வீடு, நிலத்தின் விற்பனை மட்டும் அல்ல சொத்தின் உரிமையும் ஆன்லைன் வாயிலாக கைமாற்றப்படும் முறையை கொண்டு வர வேண்டும் என இத்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் துறை அமைச்சர் பி.ராஜ்குமார் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
ஜூலை 1ஆம் தேதி தமிழ்நாடு ஹவுசிங் போர்டு தலைமையகத்தில் நடத்த முக்கியமான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் அனைத்து சேவைகளையும், தரவுகளையும் இணையம் வாயிலாக செயல்படுத்துவது மூலம் மக்களுக்கு விரைவாகவும், வெளிப்படையாகவும் தகவல்களை பொதுவெளியில் எவ்விதமான கட்டுப்பாடும் இல்லாமல் பெற முடியும்.
இதேபோல் வீட்டுவசதி வாரியம் இனி வரும் காலக்கட்டத்தில் புதிய வீட்டு மனைகள், கூட்டு முயற்சிகள் அதாவது ஜாயின்ட் வென்சர் திட்டங்கள், வர்த்தக கட்டடம் தொடர்பான தகவல்களையும் விரைவாக மக்களின் கவனத்திற்கு இண்டர்நெட் மூலமாக இத்துறை தளத்தின் மூலம் கொண்டுவரப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருக்கும் கட்டுமான திட்டங்கள், வீட்டு மனைகள், அப்பார்ட்மென்ட்கள் தகவல்களை ஆய்வு செய்தார். இதேபோல் உரிமை பத்திரத்தை வழங்கப்பட வேண்டிய எண்ணிக்கையை ஆய்வு செய்தார். இதோடு வருவாய், லாபம், நிர்வாக பிரச்சனைகள், புதிதாக நிலம் வாங்குவது தொடர்பான அனைத்து விஷயங்களையும் ஆலோசனை செய்தார் அமைச்சர் பி.ராஜ்குமார்.
இறுதியாக இக்கூட்டத்தில் வீட்டு வாரிய அதிகாரிகளை, அரசு ஊழியர்களுக்கு சொந்த வீடு பெறும் திட்டம் குறித்து கவனம் செலுத்த உத்தரவிட்டார். இதோடு செயற்கைக்கோள் நகர திட்டங்களான திருமழிசை, மதுரையில் தோப்பூர், புதுக்கோட்டையில் முள்ளூர் ஆகிய திட்டங்களின் தரத்தை உயர்த்தவும் உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications
