தமிழ்நாட்டின் அடையாளம் மாறுது.. குட்டி சீனாவாக உருவெடுக்குது.. அடேங்கப்பா..!!

சீனாவுக்கு இணையாகத் தமிழ்நாடு உயர்வது சாத்தியமில்லை என்றாலும், ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களை தயாரிப்பதில் சீனாவுக்கு நிகராக தமிழ்நாடு உருவெடுத்து வருகிறது. முதலில் சென்னையில் வெறும் ஐபோன் அசம்பிளி தளம் மட்டுமே அமைக்கப்பட்ட ஆப்பிள் சப்ளையர்கள் தற்போது முழு ஐபோன்களையும் தயாரிப்பதைத் தாண்டி, அனைத்து ஆப்பிள் பொருட்களையும் தயாரிக்கும் மொத்த சப்ளையர்களும் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் தமிழ்நாடு ஆப்பிள் எகோசிஸ்டமாக மாறியுள்ளது.

அமெரிக்க ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் தனது பலதரப்பட்ட சப்ளைர்களை தமிழ்நாட்டு கொண்டு வருவதில் கடந்த சில வருடங்களாக பெரும் முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், தற்போது தமிழ்நாடு ஆப்பிளின் முக்கிய உற்பத்தி களமாக உருவெடுத்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்திற்குத் தொடர்புடைய பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது உற்பத்தி செயல்பாடுகளைத் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது அல்லது தொடங்க திட்டமிட்டுள்ளதே இதற்கு முக்கியமான காரணமாகும்.

தமிழ்நாட்டின் அடையாளம் மாறுது.. குட்டி சீனாவாக உருவெடுக்குது.. அடேங்கப்பா..!!


தற்போதைய நிலவரப்படி, ஃபாக்ஸ்கான் ஐபோன்கள் மற்றும் ஐபேட்களை உற்பத்தி செய்து வருகிறது. எதிர்காலத்தில் AI சர்வர்களின் உற்பத்தியையும் தொடங்க உள்ளது. இதை தொடர்ந்து பெகாட்ரான் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஐபோன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. சால்‌காம்ப் நிறுவனம் ஆப்பிள் சார்ஜரை உற்பத்தி செய்து வருகிறது.

இதற்கிடையே ஃபாக்ஸ்லிங்க் மற்றும் ஃபாக்ஸ்கான் இண்டஸ்ட்ரியல் இன்டர்நெட் ஆகிய நிறுவனங்கள் விரைவில் சார்ஜிங் கேபிள் மற்றும் ஐபோன் உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அமைக்க உள்ளன. மேலும், அமெரிக்காவின் கார்னிங் மற்றும் BIEL-மோதர்சன் கூட்டணி ஆகியவை ஆப்பிள் ஃப்ரண்ட் கவர் கிளாஸ் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அமைக்க உள்ளன. இந்த தொழிற்சாலைகள் பெரும்பாலும் சென்னை மற்றும் ஓசூரில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, லக்ஷர் நிறுவனம் ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்பாட்ஸ் உற்பத்தி செய்யத் திட்டமிட்டிருந்தது. ஆனால் சீனாவுடனான உறவு மோசமான காரணமாக அந்த திட்டம் நிறைவேறவில்லை. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆப்பிள் பொருட்களுக்கான பேட்டரி தொழிற்சாலையும் மற்றும் அதன் சப்ளையர்கள் மட்டும் தான் மிஸ்ஸிங். இதன் சப்ளையர்கள் ஹரியானாவில் ஒரு தொழிற்சாலையை அமைத்து வருகிறார்.

இதேவேளையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் பெரும்பாலான நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் உற்பத்தி தளத்தை விரிவுபடுத்தும் நோக்கில் ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டின் மொத்த எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி இந்த ஆண்டு 12 பில்லியன் டாலருக்கும் மேல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டின் மொத்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் 35% க்கும் அதிகமான பங்கைத் தமிழ்நாடு கொண்டிருப்பது மற்றொரு சிறப்பு அம்சமாகும்.

இந்த வளர்ச்சியின் மூலம் தமிழ்நாடு இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உற்பத்தி மையமாக உருவெடுத்து வருவது தெளிவாகிறது. இந்த தொழிற்சாலைகள் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பதைத் தாண்டி, அடுத்த தலைமுறை தொழிற்துறை உற்பத்தி வித்திடப்பட்டு உள்ளது. இதன் நீட்சியாக அடுத்த 10 வருடத்தில் தமிழ்நாட்டில் இண்டல்ட்ரீஸ் ஆட்டோமேஷன் புரட்சி வெடித்து ரோபோடிக்ஸ் துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+