CPI எனப்படும் ரீடைல் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 7.4 சதவீதமாக உயர்ந்த பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் 6.83 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று மத்திய அரசு வெளியிட்ட தரவுகள் கூறுகிறது. இதோடு இந்தியாவின் கிராமப்புறங்களில் ஒட்டுமொத்த ரீடைல் பணவீக்கம் 7.02 சதவீதம், இதேபோல நகர்ப்புறங்களில் ஒட்டுமொத்த ரீடைல் பணவீக்கம் 6.59 சதவீதமாக உள்ளது.
ரீடைல் பணவீக்க உயர்வுக்கு முக்கியமான காரணம் உணவு பொருட்களின் விலையேற்றம். இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் எந்த மாநிலத்தில் பணவீக்கம் அதிகமாக இருந்துள்ளது, எந்த மாநிலத்தில் பணவீக்கம் பெரிய அளவில் குறைந்துள்ளது என்பதை கட்டாயம் மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

காரணம், ரீடைல் பணவீக்கத்தில் பெரும் பங்கீட்டை கொண்டு இருக்கும் உணவு பணவீக்கம் எந்த அளவுக்கு இந்திய மாநிலங்களில் தாக்கத்தை கொண்டு இருகிறது என்பதை தெரிந்துக்கொள்ள இது சரியான வாய்ப்பாகும்.
ஆகஸ்ட் மாத ரீடைல் பணவீக்க தரவுகள் படி அதிகப்படியான அளவீட்டை பதிவு செய்தது ராஜஸ்தான் மாநிலம் தான். ராஜஸ்தானில் ஜூலை மாதம் 9.7 சதவீதமாக இருந்த CPI ஆகஸ்ட் மாதத்தில் 8.6 சதவீதமாக குறைந்துள்ளது. 8 சதவீதத்திற்கு மேல் ரீடைல் பணவீக்கத்தை கொண்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் ஹரியானா, தெலுங்கானா, ஒடிஷா ஆகியவை உள்ளது.
இதில் ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களும், இந்த வருடம் சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்ளும் மாநிலங்களாகும். ரீடைல் பணவீக்கம் தரவுகள் திரட்டப்பட்டு உள்ள 22 மாநிலத்தில் சுமார் 13 மாநிலங்களின் நாட்டின் சராசரி CPI அளவான 6.8 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது, இதில் தமிழ்நாடும் ஒன்று.
ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் ரீடைல் பணவீக்கம் 6.83 சதவீதம் பென்ச்மார்க் ஆக இருக்கும் வேளையில் 9 மாநிலத்தில் குறைவான பணவீக்க அளவுக்கள் பதிவாகியுள்ளது.
டெல்லி - 3.09 சதவீதம்
அசாம் - 4.01 சதவீதம்
மேற்கு வங்காளம் - 4.79 சதவீதம்
ஜம்மு & காஷ்மீர் - 5.45 சதவீதம்
சத்தீஸ்கர் - 5.52 சதவீதம்
மத்திய பிரதேசம் - 6.07 சதவீதம்
மகாராஷ்டிரா - 6.12 சதவீதம்
கேரளா - 6.26 சதவீதம்
பீகார் - 6.58 சதவீதம்
இதேபோல் இந்தியாவின் சராசரி அளவை காட்டிலும் அதிக பணவீக்கம் கொண்ட மாநிலங்கள் பட்டியல்
குஜராத் - 6.88 சதவீதம்
ஹிமாச்சல பிரதேசம் - 7.01 சதவீதம்
உத்தரப்பிரதேசம் - 7.2 சதவீதம்
பஞ்சாப் - 7.34 சதவீதம்
தமிழ்நாடு - 7.76 சதவீதம்
ஆந்திரப் பிரதேசம் - 7.78 சதவீதம்
உத்தரகாண்ட் - 7.84 சதவீதம்
கர்நாடகா - 7.85 சதவீதம்
ஜார்கண்ட் - 7.91 சதவீதம்
ஒடிசா - 8.23 சதவீதம்
ஹரியானா - 8.27 சதவீதம்
தெலுங்கானா - 8.27 சதவீதம்
ராஜஸ்தான் - 8.6 சதவீதம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications