சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024-ல் பல்வேறு தொழில்துறை திட்டங்களைத் தொடங்கி வைத்ததோடு, சுமார் 28 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி ஒரே நாளில் சுமார் 68000 கோடி ரூபாய் முதலீட்டில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது.
இதில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான தமிழ்நாடு இன்ஜினியரிங் மற்றும் இன்னோவேஷன் சென்டர் (TN Engine) என்ற பெரிய பொறியியல் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்த TN Engine திட்டத்தை டிட்கோ மற்றும் டாடா டெக்னாலஜீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளும் ரூ.400 கோடி மதிப்பிலான பொது பொறியியல் வசதியாகும். இது கோவை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு கட்டங்களாக உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலருக்கு உயர்த்த வேண்டும் என்ற முக்கியமான இலக்கை அடைய, மாநிலத்தின் உற்பத்தித் துறையை அதிகம் சார்ந்திருக்கிறது. இதேவேளையில் உலகளவில் உற்பத்தி மற்றும் தொழிற்துறை பல பரிமாணங்களில் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் எதிர்காலத்திற்குத் தேவையான உற்பத்தி கட்டமைப்பை உருவாக்கும் முயற்சி தான் இந்த TN Engine.

TN Engine இந்தியாவில் இதுவரையில் யாரும் இத்தகையை இன்ஜினியரிங் சென்டரை அமைத்தது கிடையாது. இந்த புது வகையான மையம் சுமார் 9 புதிய தொழில்நுட்ப ஆய்வகங்களைக் கொண்டிருக்கும். முதல் கட்டத்தில், டிசைன் மற்றும் இன்ஜினியரிங் லேப், அடிட்டிவ் மேனுபேக்சரிங் லேப், அடிட்டிவ் மெஷினிங் லேப் மற்றும் மெட்டிரியல் டெஸ்டிங் லேப் ஆகிய 4 மேம்பட்ட ஆய்வகங்கள் ரூ.166.84 கோடி செலவில் அமைக்கப்படும்.
இந்த ஆய்வகங்கள் புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள், புதிய எம்எஸ்எம்இகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முக்கியமான பொறியியல் தொழில்நுட்பத்தில் தேவையான உதவிகளைச் செய்யும். இது தொழிற்துறையில் புதுமையைக் கொண்டு வரும் அனைத்து நிறுவனங்களுக்கும் பயன்பெறும்.
மேலும் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக உற்பத்தி மற்றும் டெக் நிறுவனங்கள் கொண்டிருக்கும் கோயம்புத்தூரில் இந்த தமிழ்நாடு இன்ஜினியரிங் மற்றும் இன்னோவேஷன் சென்டர் (TN Engine) அமைக்கப்பட உள்ளது. மேலும் இது கோவை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படும் காரணத்தால் மாணவர்களுக்கும் இது பெரிய அளவில் பயனளிக்கும், புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்குவோருக்குப் பெரிய அளவில் இந்த TN Engine பயனளிக்கும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications