சென்னை: தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இதற்காக தமிழ்நாடு அரசு முதலீடுகளை ஈர்க்கவும் உற்பத்தியை அதிகரிக்கவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தொழில்நுட்ப ரீதியில் வலுப்படுத்தும் நோக்கில் நவீன கொள்கையை அரசு வகுத்து வருகிறது. தமிழகத்தில் DEEP TECH POLICYஐ அரசு வகுத்து வருவதாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கான அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலம் என்ற இலக்கை எட்டும் நோக்கில் நாட்டிலேயே முதன்முறையாக DEEP TECH POLICYஐ அரசு வடிவமைத்து வருவதாக அவர் கூறியுள்ளார். கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் "தமிழ்நாட்டில் புதுமை" என்பதுதான் அரசின் புதிய தாரக மந்திரம் என கூறினார். இது வெறும் ஸ்லோகன் மட்டுமல்ல இதுதான் நமது செயல்பாட்டுக்கான ஒரு மூலோபைய அழைப்பு என தெரிவித்தார்.

தமிழ்நாட்டை புது கண்டுபிடிப்புகளின் மையமாக மாற்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்நாடு டெக்னாலஜி ஹப் உடன் கார்ப்பரேட் நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டுமென பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அழைப்பு விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் "Unlock The Future Innovation Challenge" என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு 4.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு தொகையையும் அமைச்சர் வழங்கினார்.
இந்த போட்டியில் சுமார் 500 குழுக்கள் கலந்து கொண்டன. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் செயலாற்றும் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன. இதில் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டு ஒவ்வொருவரின் கண்டுபிடிப்புகளையும் மதிப்பாய்வு செய்து முதல் மூன்று நிறுவனங்களை தேர்வு செய்தனர். இந்த போட்டியில் சுகாதாரப் பிரிவில் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் நிறுவனமான Vyuhaa Med Data முதல் பரிசை பெற்றது. அதாவது இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ரியல் டைம் டேட்டா அனாலிசிசில் ஈடுபடுகிறது.
அதேபோல சுற்றுச்சூழல் உகந்த தீர்வுகளை வழங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனமான Daijo இந்த போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தது. அதேபோல சுற்றுச்சூழல் சார்ந்த Climatequant Tech ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்த போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்தது. முன்னதாக தமிழ்நாட்டின் தகவல் DEEP TECH POLICY உருவாக்கம் தொடர்பான ஒரு வட்டமேசை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications