இந்தியாவிலேயே வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாடு உற்பத்தி மட்டுமில்லாமல் ஐடி, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் வேகமாக வளர்ந்து வருகிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளமாக ஒரு ஆய்வறிக்கை வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் ஜிசிசி மையங்களை ஈர்க்கும் ஒரு மாநிலமாகவும் தமிழ்நாடு மாறி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய Global capability Center எனப்படும் GCC மையங்களை தற்போது பெரும் அளவில் இந்தியாவில் நிறுவுவதற்கு ஆர்வம் காட்டுகின்றன.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய ஒரு துறையாகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு துறையாகவும் gcc மையங்கள் இருந்து வருகின்றன . ஐடி நிறுவனங்களை விட அதிக சம்பளம் தரக்கூடியவையாக ஜிசிசி மையங்கள் இருப்பதால் இதில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஃபிக்கி மற்றும் அனராக் ஆகிய இரண்டு அமைப்புகளும் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி தமிழ்நாடு இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான ஜிசிசி மையங்களை ஈர்க்கக்கூடிய ஒரு மாநிலமாக மாறி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது .தமிழ்நாட்டில் ஏற்கனவே 250 க்கும் அதிகமான ஜிசிசி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில் உள்ள மொத்த ஜிசிசி மையங்களில் 10% மையங்கள் சென்னையில் தான் இருக்கின்றன என இந்த அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது . அதேபோல ஜிசிசி மையங்களை அமைக்கும் இரண்டாம் நிலை நகரங்களின் பட்டியலில் கோயம்புத்தூர் முதலிடத்தில் இருக்கிறது.
இந்தியாவிலேயே சென்னை மற்றும் மும்பை ஆகிய இரண்டு நகரங்களில் தான் நாட்டின் 70 சதவீதத்திற்கும் அதிகமான டேட்டா மையங்கள் இருக்கின்றன என தெரிவிக்கும் இந்த நிறுவனம் , தமிழ்நாட்டில் சென்னை கோயம்புத்தூர் மதுரை ஆகிய மூன்று நகரங்கள் புதிய டேட்டா மையங்களாக மாறி வருகின்றன என குறிப்பிடுகிறது.
தமிழ்நாட்டில் 54 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்படுகின்றன , இந்தியாவிலேயே இது அதிகம் என தெரிவிக்கிறது. அதேபோல 30 சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சென்னை போன்ற தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கிறது என அனராக் நிறுவனத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.சென்னையில் அலுவலக இடங்களுக்கான தேவையும் கிடங்குகளுக்கான தேவையும் அதிகரித்து வருவது ஆரோக்கியமானதாக இருக்கிறது என அனராக் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications