சென்னை: வேலைவாய்ப்புக்கு வெளிநாட்டுக்கு செல்ல இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது. அந்த வகையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேலை தேடும் இளைஞர்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பு வேலை வாய்ப்பு முகவர்கள் மற்றும் நிறுவனங்களின் சான்றுகளை முழுமையாக சரி பார்க்கும்படி அயலகத் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது. அதன் விவரங்களை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்
வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டுக்கு செல்ல இருக்கும் தமிழர்கள் போலியான வேலை வாய்ப்பை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், ஆள்சேர்ப்பு முகவர்கள், பணி வழங்கும் நிறுவனம் குறித்து நன்றாக விசாரித்து பிறகு பணிக்கு செல்ல வேண்டும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது. கம்போடியா, தாய்லாந்து மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் இது போன்ற போலி சான்றுகளின் மூலம் இயங்கிக் கொண்டிருந்த நிறுவனங்களால் சிக்கிக்கொண்டிருந்த 83 தமிழ் இளைஞர்கள் அண்மையில் மீட்க்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

லாவோஸ் நாட்டில் அதிக சம்பளம் தரும் வேலைகள் இருப்பதாக உறுதி அளித்து, பதிவு செய்யப்படாத முகவர்களால் இந்திய நாட்டிலுள்ள பலர் ஏமாற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளன. அயலகத் தமிழர் நலத்துறையின் கூற்றுப்படி, இதுபோல் இந்திய நபர்கள் ஏமாற்றப்பட்டு தாய்லாந்தில் இருந்து லாவோஸ் நாட்டுக்கு சட்டவிராதமாக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு கடுமையான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளின் கீழ் பணி புரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் கிரிமினல் சிண்டிகேட்களால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்திய குடிமக்களுக்கு தாய்லாந்து அல்லது லாவோஸ் நாட்டில் வேலை பார்ப்பதற்கு வேலை வாய்ப்பு விசா மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மேலும் சுற்றுலா விசாக்கள் கண்டிப்பாக சுற்றுலாவுக்கே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதை மீறும் குற்றவாளிகளுக்கு 18 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் கடுமையான தண்டனைகளும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இது போன்ற மோசடிகளுக்கு இரையாகாமல் இருக்குமாறு தமிழக அரசு தனிநபர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை அளித்துள்ளது. வெளிநாட்டுக்கு செல்வதற்கு முன்பு ஆட்சேர்ப்பு முகவர்கள் மற்றும் நிறுவனங்களை பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்வதன் முக்கியத்துவத்தை, இது வலியுறுத்துகிறது. வருங்கால ஊழியர்கள் தங்களிடம் வேலைவாய்ப்பு விசா மற்றும் முறையான வேலை வாய்ப்பு ஒப்பந்தம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்தியாவில் உள்ள அந்த நாடுகளின் தூதரகங்கள் மூலம் தங்கள் விசாவின் நம்பகத்தன்மையை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications