மேக் இன் இந்தியா திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்வதற்கு முன்பே தமிழ்நாட்டு உற்பத்தியிலும், சேவை துறையில் சிறந்து விளங்கியது யாராலும் மறுக்க முடியாது. இந்த நிலையில் கடந்த 10 வருடத்தில் சென்னை மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் துள்ளிக் குதித்து வந்து பெரும் முதலீட்டு உடன் மெகா தொழிற்சாலையை உருவாக்கி வருகின்றனர்.
அதிலும் முக்கியமாக இந்தியாவில் முதல் முறையாக வெளிநாட்டில் இருந்து ஒரு பெரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் உற்பத்தி தளத்தை அமைத்தது என்றால் மிகையில்லை. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு பெரும் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் உற்பத்தி மற்றும் எற்றுமதி தளமாக உள்ளது.

உதாரணமாக ஆப்பிள் ஐபோன் உற்பத்தி என எடுத்துக்கொண்டால், இந்தியாவில் இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் 3 பெரிய சப்ளையர்களும் தமிழ்நாட்டில் உள்ளனர். சென்னையில் பாக்ஸ்கான், பெகாட்ரன் ஆகியவை இருக்கும் வேளையில், கிருஷ்ணகிரியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் உள்ளது. முன்பு பெங்களூருக்கு அருகில் விஸ்திரான் இருந்தது ஆனால் தற்போது விஸ்திரான் நாட்டை விட்டு வெளியேறி டாடா எலக்ட்ரானிக்ஸை கைப்பற்றியது.
இந்த நிலையில் 2023 ஆம் நிதியாண்டின் முதல் 6 மாத ஏற்றுமதி தரவுகள் குறித்து மத்திய அரிசின் ரிப்போர்ட்டில் தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக உருவெடுத்துள்ளது.
மத்திய இறக்குமதி-ஏற்றுமதி தரவுகளின்படி, இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் தமிழ்நாட்டில் இருந்து சுமார் 4.78 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவின் மொத்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி அளவு முதல் 6 மாத காலத்தில் 15.4 பில்லியன் டாலராக இருக்கும் வேளையில், தமிழ்நாடு மட்டுமே 4.77 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்து 30 சதவீத பங்கீட்டைப் பெற்றுள்ளது.
இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் உத்தரப் பிரதேச மாநிலம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் 2வது இடத்திற்கு உயர்ந்துள்ளது தான், சுமார் 2.57 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்து 16.65 சதவீத பங்கீட்டைக் கொண்டு உள்ளது. இதைத் தொடர்ந்து கர்நாடகா 2.29 பில்லியன் டாலர், மகாராஷ்டிரா 1.691 பில்லியன் டாலர், குஜராத் 1.588 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இதேவேகத்தில் தொடர்ந்தால் இந்த வருடத்தின் இறுதிக்குள் 8 பில்லியன் டாலர் அளவீட்டை அடையவோம் எனத் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பிஐ ராஜா அவர்கள் டிவிட்டரில் தெரிவித்தார்.
ஜூலை மாதம், தைவான் நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான பாக்ஸ்கான், ஐபோன்கள் தயாரிக்கும் தற்போதைய தொழிற்சாலையில் இருந்து பிரிந்து, சென்னைக்கு வெளியே ஒரு ஆலையை அமைக்க 194.45 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் முதலீடு செய்வதாக அறிவித்ததார்.
More From GoodReturns

கோயம்புத்தூர் ரியல் எஸ்டேட்: 3 வருடத்தில் டபுள் மடங்கு வளர்ச்சி.. இந்த ஏரியா பக்கமே போக முடியாது போலியே..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications