அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஜூலை மாத இறுதியில், இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதிப்பதாக அறிவித்தார். பின்னர், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அதை 50% ஆக உயர்த்தினார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதே இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 27 அன்று அமலுக்கு வந்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி மையங்களான திருப்பூர், கோவை, மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள ஜவுளி மற்றும் பின்னலாடைத் துறையினர் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளனர். இந்தத் திடீர் நடவடிக்கை, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
Goodreturns Tamil செய்தி நிறுவனத்திடம் பேசிய திருப்பூரைச் சேர்ந்த தொழில்துறை பிரதிநிதிகள், இந்த வரிவிதிப்பின் தாக்கம் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும், பிரச்சனைகளையும் பகிர்ந்து கொண்டனர். திருப்பூரில் உள்ள 10,000-க்கும் அதிகமான நிறுவனங்களில், சுமார் 2,500 நிறுவனங்கள் பெரிய அளவில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. 2024-25 நிதியாண்டில், திருப்பூர் மட்டும் ரூ.40 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதில் 40% அமெரிக்காவிற்குச் சென்றதாகும். தற்போது, இந்த வர்த்தகம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

அகில் டெக்ஸ் எக்ஸ்போர்ட்
திருப்பூரைச் சேர்ந்த அகில் டெக்ஸ் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் மேலாளர் விஸ்வா, இந்த வரி அமலுக்கு வருவதற்கு முன்பே சில நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி விட்டதாகவும், இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தங்கள் நிறுவனம் அமெரிக்காவை மட்டும் நம்பியிருக்காமல், மெக்சிகோ, அயர்லாந்து, இங்கிலாந்து, மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கு ஆர்டர்களைப் பெறுவதாகவும், இதனால் 30% வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தனது நிறுவனத்தில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் நிலையில், ஆட்குறைப்பு செய்ய சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ்
இதேபோல், திருப்பூர் ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவில் மேலாளராகப் பணிபுரியும் ஸ்ரீதர், தங்கள் நிறுவனத்திற்கு அமெரிக்க ஆர்டர்கள் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அடுத்த வாரமே பணியாளர்கள் நீக்கம் செய்யப்படலாம் என்றும் கவலை தெரிவித்தார். இந்த திடீர் வரிவிதிப்பு, கடந்த வாரத்திலேயே பல்வேறு நிறுவனங்களை உற்பத்தியை நிறுத்த வைத்தது. இதனால், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஏற்கனவே வேலை இழந்து பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.
அமெரிக்க வாடிக்கையாளர்கள், இந்த புதிய வரியையும் ஏற்றுமதியாளர்களையே செலுத்தும்படி கேட்பதால், நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. இந்த வரிவிதிப்பால், அமெரிக்காவிற்கு ஆண்டுக்கு ரூ.73 ஆயிரம் கோடிக்கு ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த வரி விதிப்புத் தொழில் துறையின் வளர்ச்சியை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்திவிடும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் முக்கிய இறக்குமதிகளில் இந்தியா 50% க்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டுள்ள பொருட்கள் பட்டியல்:

Mk Stalin: டிரம்ப் அரசின் வரி விதிப்பால் தமிழ்நாடு சுமார் 3.93 பில்லியன் டாலர் இழப்பை சந்திக்கும் நிலையில் உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார், இந்த வரி உயர்வு தமிழ்நாடு மாநில பொருளாதாரத்திற்கு "எப்போதும் இல்லாத அளவிலான தாக்கம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரியால் டெக்ஸ்டைல் துறையில் இந்தியாவின் வர்த்தகத்தை பிடிக்கப்போகும் நாடுகளின் பட்டியல்
| நாடு | அமெரிக்காவின் புதிய வரி (தோராயமாக) |
| வியட்நாம் | 20% |
| இந்தோனேசியா | 19% |
| பங்களாதேஷ் | 35% |
| கம்போடியா | 36% |
| சீனா | 30% |
| இந்தியா | 50% |
BJP president Nainar Nagenthran: மத்திய அரசு திருப்பூர் டெக்ஸ்டைல் துறைக்கு உதவி வழங்கும் என்று மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருப்பூரில் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார். இந்த சந்திப்பில் "திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் பெரிய எண்ணிக்கையிலான ஏற்றுமதியாளர்கள் உள்ளனர், அமெரிக்க வரி உயர்வால் இவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மத்திய அரசு ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க உரிய உதவியை வழங்கும். இரண்டு நாட்களுக்கு முன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து இந்த பிரச்சினைகளை விளக்கினர். அவர் மேலும் வேலைவாய்ப்பு இழப்புகளை தடுக்க மத்திய அரசு தகுந்த பாதுகாப்பை வழங்கும் என்று உறுதியளித்தார்," என்று கூறினார்.
தமிழ்நாடு இந்தியாவின் மொத்த டெக்ஸ்டைல் ஏற்றுமதியில் 28 சதவீதம் பங்களிக்கிறது, இது நாட்டின் மற்ற மாநிலங்களை காட்டிலும் மிகவும் அதிகப்படியான பங்கீடாகும். மேலும் இந்த துறை பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை பாதுகாக்கும் ஒரு முக்கிய பொருளாதார தூணாக உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், டெக்ஸ்டைல் தொழிலாளர்களில் 65 சதவீதம் பெண்களாக உள்ளனர், கடந்த ஆண்டு அன்னிய செலாவணியாக மட்டும் ரூ.40,000 கோடி ஈட்டப்பட்டது. இந்த துறையில் ஆடை உற்பத்தி மட்டும் அல்லாமல் டையிங், லாஜிஸ்டிக்ஸ், பேக்கேஜிங் மற்றும் இயந்திரத் தொழில்களைக் கொண்ட ஒரு பரந்த டெக்ஸ்டைல் எகோசிஸ்டம் உள்ளது.
டெக்ஸ்டைல் துறையில் இந்தியாவுடன் போட்டிப்போடும் வங்காளதேசம், கம்போடியா, வியட்நாம், இலங்கை போன்ற நாடுகளுக்கு அமெரிக்கா குறைந்த வரி விதித்துள்ளதால், அமெரிக்க இறக்குமதியாளர்கள் அந்நாடுகளிடமிருந்து பொருட்களை வாங்க முயற்சி செய்வார்கள். வாங்குபவர்கள் 5% விலை வித்தியாசம் இருந்தாலே வேறு நிறுவனத்திற்குச் சென்று விடுவார்கள். இப்போது 10% வித்தியாசம் இருப்பதால், வேறு நாடுகளிலிருந்து வாங்குவார்கள் என்று கூறப்படுகிறது. இது, அமெரிக்கச் சந்தையை நம்பி இயங்கிவந்த நிறுவனங்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

மொத்தத்தில், டிரம்ப்பின் வர்த்தகக் கொள்கைகள், தமிழ்நாட்டின் ஜவுளி, ஆட்டோமொபைல், மற்றும் தங்க நகைத் தொழில் எனப் பல துறைகளில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியைத் தீர்க்க மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே தொழில்துறையினரின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.
தீர்வு: அமெரிக்காவின் இந்த 50 சதவீத வரி மூலம் ஏற்படும் பின்னடைவு, இந்தியா பிரிட்டன் உடன் FTA ஒப்பந்தம் கையெழுத்திட்டு, ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தகத்தில் விரைவாக முன்னேறி வரும் நேரத்தில் வந்துள்ளது. இது அடுத்த சில மாதங்களுக்கு திருப்பூர் டெக்ஸ்டைல் துறைக்கு கஷ்டமான நேரம் என்றாலும் ஆனால் பதற்றப்பட வேண்டிய நேரம் இல்லை. திருப்பூர் உற்பத்தியாளர்கள் மத்திய மாநில அரசு உதவியுடன் விரைவில் மாற்று சந்தையை தேடிப்படிக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications