சென்னை: இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஒயிட் காலர் (White Collar) எனப்படும் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்யக்கூடிய வேலை வாய்ப்புகள் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
Naukri தளம் அக்டோபர் மாதத்திற்கான வேலைவாய்ப்பு இன்டெக்ஸ் என்ற பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தென்னிந்திய மாநிலங்களில் தான் ஒயிட் காலர் வேலைகள் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் ஒயிட் காலர் வேலை வாய்ப்புகள் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. தெலுங்கானாவில் 16 சதவீதம், கர்நாடக மாநிலத்தில் 12 சதவீதம், ஆந்திர மாநிலத்தில் 9 சதவீதம் , கேரள மாநிலத்தில் 7 சதவீதம் என அலுவலகத்தில் அமர்ந்து செய்யக்கூடிய வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது .
அதேபோல ரிசர்ச் அண்ட் அனலிடிக்ஸ் (Research & Analytics industry) துறையில் ஹைதராபாத் மற்றும் சென்னையில் தான் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தில் இது 51 சதவீதம், சென்னையில் 50 சதவீத வளர்ச்சியும் பெற்றுள்ளது.
BFSI industryஇல் கேரள மாநிலம் கொச்சினில் தான் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டை விட 40 சதவீதம் அதிகரித்துள்ளது என இந்த அறிக்கை கூறுகிறது.
அக்டோபர் மாதத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு பிரிவில் 18 சதவீதம் , பார்மா மற்றும் பயோடெக் பிரிவில் 12 சதவீதம், ஐடி பிரிவில் 6 சதவீதம் என அக்டோபர் மாதத்தில் இந்த துறைகள் எல்லாம் வேலை வாய்ப்புகளில் முன்னிலை வகிக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் மெசின் லேர்னிங் பிரிவில் வேலை வாய்ப்புகள் 39 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏழு மாதத்தில் நான்கு மாதங்களில் ஐடி பிரிவில் வேலை வாய்ப்பு வளர்ச்சி பாசிட்டிவாக இருக்கிறது என இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பல்வேறு நிறுவனங்களும் ஃபிரஷர் நிலையில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வது அதிகரித்துள்ளது என இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில் ஃபிரஷர்களை வேலைக்கு எடுப்பது 6 சதவீதம் என உயர்ந்துள்ளது.
இதில் கட்டிட வடிவமைப்பு இன்டீரியர் டிசைனிங் பிரிவில் ஃபிரஷர்களுக்கான வேலைவாய்ப்பு 57 சதவீதம் அதிகரித்துள்ளது. வேளாண்மை மற்றும் பால் சம்பந்தப்பட்ட துறைகளில் இது 36 சதவீதம் என உயர்ந்துள்ளது.
ஃபிரஷர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் இரண்டாம் நிலை நகரங்களில் கோயம்புத்தூர் மற்றும் ஜெய்பூர் ஆகிய நகரங்களில் முன்னிலை வகிக்கின்றன. பிரஷர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்படுவது இந்தியாவிலேயே கோயம்புத்தூர் நகரில் 31 சதவீதம் என்ற அளவில் உள்ளது. மேலும் 16 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் கொண்ட நபர்கள் மூத்த அதிகாரிகள் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்படுவது 23 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.


Click it and Unblock the Notifications