மத்திய பட்ஜெட்டுக்கு தாக்கல் செய்யப்பட இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் மிக முக்கியமான ஒரு கோரிக்கையை மத்திய நிதி அமைச்சருக்கு முன் வைத்துள்ளனர்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர் பூபதி, 2026 மத்திய பட்ஜெட்டில் தங்கள் துறைக்கு 50% சூரிய ஒளி ஆற்றல் மானியம் வழங்கக்கோரியுள்ளார். மேலும் விசைத்தறி துறை சந்திக்கும் நெருக்கடிக்குத் தீர்வு காண உறுதியான நடவடிக்கைகள் தேவை என அவர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 5 லட்சத்திற்கும் மேல், நாடு முழுவதும் 25 லட்சத்திற்கும் அதிகமான விசைத்தறிகள் உள்ளன. திருப்பூர், கோயம்புத்தூரில் 2 லட்சம் விசைத்தறிகள் செயல்படுகின்றன. இதில் லட்சக்கணக்கானவர்கள் தினக்கூலி தொழிலாளர்களாக செயல்படுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக வருவாய் இன்றி, பல தொழிலாளர்கள் பாரம்பரியத் தொழிலைவிட்டு வெளியேறுகின்றனர்.
"ஊதிய உயர்வு இன்மை, மின் கட்டண உயர்வு, மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவை இத்துறைக்கு லாபமின்மையை ஏற்படுத்தி, வருவாயற்ற நிலையை உருவாக்கியுள்ளன," என பூபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
விசைத்தறி சங்கங்கள் 50% சூரிய ஆற்றல் மானியம் அறிவிப்பை பட்ஜெட்டில் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. 12 கிலோவாட் மின்சாரத்திற்கான ரூ 5 லட்சத்திற்கும் மேல் ஆகும் சூரிய தகடுகளை தொழிலாளர்களால் நிறுவ இயலாது. 50% மானியம் கிடைத்தால், இத்தொழிலை மேலும் 15 ஆண்டுகள் நிலைநிறுத்தலாம் என கூறுகின்றனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்களின் கோரிக்கையை கவனத்தில் கொள்ள கேட்டு கொண்டுள்ளனர்.
தமிழக அரசு சாதாரண விசைத்தறிகளுக்கு இரு மாதங்களுக்கு ஒருமுறை 1,000 யூனிட் இலவச மின்சாரம் வழங்குகிறது. மத்திய பட்ஜெட்டில் மானிய விலையில் சூரிய சக்தி பலகைகள் நிறுவும் திட்டம் இடம்பெற்றால் அது தங்களுக்கு இன்னும் நன்மை பயக்கும் என விசைத்தறி உரிமையாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
ஏற்கனவே அமெரிக்க வரி விதிப்பு, போதிய தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என பல சிக்கல்களை விசைத்தறி உரிமையாளர்கள் எதிர்கொண்டுள்ளனர். இந்த பட்ஜெட் அந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு அளிக்கும் பட்ஜெட்டாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications