சென்னை: உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் ஒப்பந்த உற்பத்தியாளர்களில் ஒன்றான பாக்ஸ்கான், தனது தாய் நாட்டிலும் மற்றும் சீனாவில் உள்ள மாபெரும் தொழிற்சாலை கட்டமைப்பிற்கு இணையாகத் தெலுங்கானாவிலும் 'பாக்ஸ்கான் சிட்டி' அமைக்க அம்மாநில அரசு 2,000 ஏக்கர் நிலம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாக்ஸ்கான்-க்கு மிக முக்கியமான வாடிக்கையாளர் என்றால் ஆப்பிள் தான், ஆனால் இந்நிறுவனம் தற்போது ஸ்மார்ட்போன் மட்டும் அல்லாமல் எலக்ட்ரிக் கார், ஐடி சேவை, ஐடி ஹார்டுவேர் என பல விஷயங்களை தயாரித்து வருகிறது. பாக்ஸ்கான் தற்போது எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் பணியில் தீவிரமாக இருக்கும் வேளையில் இத்துறையில் முக்கியமான வாடிக்கையாளர்களை தேடி வருகிறது.

ஆப்பிளின் சீன சந்தையை விட்டு வெளியேற முடிவு செய்ததிற்கு முன்பாகவே பாக்ஸ்கான் தமிழ்நாட்டுக்கு, அப்போது சியோமி மற்றும் இதர சில பிராண்டுகளுக்கு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தது. இதன் நீட்சியாகவே தற்போது தமிழ்நாட்டில் ஐபோன் 16 சீரியஸ் போன்களை தயாரிக்க உள்ளது. பாக்ஸ்கான் மூலம் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு வர்த்தகம், வருவாய், ஏற்றுமதி எனப் பல வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதே மேஜிக்கல் வளர்ச்சியை, தமிழ்நாட்டுப் பொருளாதாரத்துடன் போட்டிப்போடும் பிற மாநிலங்களும் பெற வேண்டும் என்ற இலக்குடன் தற்போது கர்நாடகா, ஆந்திர, தெலுங்கானா மாநிலங்கள் களத்தில் இறங்கியுள்ளது.
கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களால் தொழில்துறை பூங்கா அல்லது 'பாக்ஸ்கான் சிட்டி' அமைக்க பாக்ஸ்கானை இரு மாநில அரசும் வற்புறுத்தப்படுகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தால் ஒரு தொழில்துறை பூங்கா அமைக்க 2,500 ஏக்கர் மற்றும் கர்நாடக அரசு சப்ளையர் பூங்கா அமைக்க 300 ஏக்கர் நிலத்தை பாக்ஸ்கான்-க்கு வழங்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தெலுங்கானா அரசு 2000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுகுறித்து தெலங்கானாவின் IT மற்றும் தொழில்துறை அமைச்சர் டுடில்லா ஸ்ரீதர் பாபு கூறுகையில் "சமீபத்தில், எங்கள் முதல்வர் பாக்ஸ்கான் தலைவரைச் சந்தித்தார். 'பாக்ஸ்கான் சிட்டி'யை நிறுவ ஆர்வம் காட்டினார். "இதற்காக எங்கள் அரசு சுமார் 2,000 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது. இந்த நிலத்தில் தங்கள் தேவைக்கேற்ப வகையில் தொழிற்சாலைகளை அமைத்துக்கொள்ள முடியும். எனவே, இந்த பகுதிகளை அவர்களின் துணை நிறுவனங்களுக்கும் பயன்படுத்தலாம்" என்று கூறினார்.
இதேவேளையில் பாக்ஸ்கான் ஒதுக்கப்பட்ட 2000 ஏக்கர் நிலத்தை மதிப்பீடு செய்ய ஒரு ஆய்வுக் குழுவை தெலங்கானாவுக்கு இந்த வாரம் வர உள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
பாக்ஸ்கான் சீனாவின் Zhengzhou என்னும் நகரத்தில் மாபெரும் தொழிற்சாலை வைத்துள்ளது, சுமார் 5.6 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்துறை நகரத்திற்கு ஐபோன் சிட்டி என்ற பெயர் உள்ளது. இந்த தொழிற்துறை நகரத்தில் சுமார் 300000 முதல் 400000 ஊழியர்கள் பணியாற்றுவது மட்டும் அல்லாமல் உலகில் 50 சதவீத ஐபோன்கள் இங்குத் தயாரிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications