தமிழ்நாடு அரசு, மாநிலத்தில் புதிய சிப்காட் (SIPCOT) தொழிற்பூங்காக்களை அமைக்க உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார். சமீபத்தில் அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவித்த விண்வெளி கொள்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் 4 புதிய சிப்காட் அமைக்கும் அறிவிப்பு வந்துள்ளது.
இன்று வெளியான அறிவிப்பில் ஸ்டாலின் தலைமையிலான அரசு வேலூர், கள்ளக்குறிச்சி, சிவகங்கை மற்றும் தென்காசி மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்களை உருவாக்குவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டங்கள் மொத்தம் ரூ.1,650 கோடி முதலீடுகளை ஈர்க்கும் திறன் கொண்டவை மற்றும் 16,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிய தொழிற்பூங்கா:
தமிழ்நாடு அரசு வேலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் அமைக்க உள்ள தொழிற்பூங்கா சுமார் ரூ.500 கோடி முதலீடுகளை ஈர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. மேலும், இது சுமார் 2,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வேலூர் மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்கு வகிக்கும் என்று தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சியில் சிப்காட் தொழிற்பூங்கா:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 450 ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய சிப்காட் தொழிற்பூங்காவை அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தொழிற்பூங்கா, ரூ.650 கோடி முதலீடுகளை ஈர்க்கும் ஆற்றல் கொண்டது மற்றும் சுமார் 9,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளூர் மக்களுக்கு பொருளாதாரத்திலும், தனிநபர் வருமானத்திலும் வளர்ச்சி அடைய சிறப்பான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது இந்த திட்டம்.
சிவகங்கை மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா:
சிவகங்கை மாவட்டத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் மற்றொரு சிப்காட் தொழிற்பூங்காவை அமைக்கவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த தொழிற்பூங்கா, ரூ.200 கோடி முதலீடுகளை ஈர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது மற்றும் 2,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என அமைச்சர் டிஆர்பி ராஜா சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
தென்காசியில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா:
தென்காசி மாவட்டத்தில் அமைக்கப்படும் புதிய சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.300 கோடி முதலீடுகளை ஈர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது மற்றும் 3,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என அமைச்சர் டிஆர்பி ராஜா சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் இந்தியாவில் பிற எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாடு அரசு 2024-ஆம் ஆண்டு நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டில் (Tamil Nadu Global Investor Meet) முதலீடு செய்வதாக விருப்பம் தெரிவித்த நிறுவனங்களில் சுமார் 72% நிறுவனங்கள் உண்மையாகவே முதலீட்டு செயிது கன்வெர்ஷன் ரேஷியோவில் முன்னோடியாக உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் சிப்காட் தற்போது 48,926 ஏக்கர் நில இருப்பை கொண்டுள்ளது. இந்த நில இருப்பு, மாநிலத்தில் தொழிற்பூங்காக்களை விரிவாக்குவதற்கும், புதிய தொழில்களை ஈர்ப்பதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் ரூ.1,650 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதன் மாநிலத்தில் உள்ளூர் பொருளாதாரம் மேம்படும் வகையில் சுமார் 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அனைத்தையும் விட முக்கியமாக இளைஞர்களின் வேலையின்மை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இந்த 4 சிப்காட் தொழிற்பூங்காவும் 2ஆம் மற்றும் 3ஆம் நிலை மாவட்டத்தில் அமைக்கப்படுவதால் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாவட்டங்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு உதவும். இந்த தொழிற்பூங்காக்கள், அந்தந்த பகுதிகளில் உள்ளூர் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளை வலுப்படுத்தும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications