ஸ்கூல் பீஸ் எவ்வளவுன்னு நோட்டீஸ் போர்டுல வைங்க! தனியார் பள்ளிகளுக்கு அரசு வைத்த செக்! பெற்றோருக்கு மகிழ்ச்சி!

ஜூன் மாதம் சம்மர்லீவுக்கு பிறகு பள்ளிகள் திறக்கும் நேரம். ஒவ்வொரு ஆண்டும் இந்த மாதம் வந்து விட்டால் பெற்றோருக்கு இருக்கும் ஒரே கவலை, "இந்த ஆண்டு எவ்வளவு ஸ்கூல் ஃபீஸ் கட்ட வேண்டும்? என்பதுதான். அதிலும் இரண்டு மூன்று குழந்தைகள் இருந்தால் சில பெற்றோருக்கு நடுக்கமே வந்துவிடும். வீட்டு வாடகை, விலைவாசி உயர்வுக்கு மத்தியில் பள்ளிக் கட்டணமும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. ஒரு சில தனியார் பள்ளிகள் மறைமுகக் கட்டணம் என்ற பெயரில் பெற்றோருக்கு சுமையை அதிகரிக்கின்றன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்காக தமிழக அரசு ஒரு அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இனி தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகள், பிரைமரி, நர்சரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் பிற பள்ளிகள் அனைத்தும் தங்கள் கல்விக் கட்டண விபரங்களை ஜூன் 5-ஆம் தேதிக்குள் அல்லது அதற்கு முன்னதாகவே பள்ளியின் அறிவிப்பு பலகைகளில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று டைரக்டரேட் ஆஃப் பிரைவேட் ஸ்கூல் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கடந்த மாதம் தமிழ்நாடு தகவல் ஆணையம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி பள்ளிகளின் கட்டணம் என்பது அனைவருக்கும் தெரிய வேண்டிய விபரம். இதை பெற்றோரின் கண் பார்வை படும்படி பலகைகளில் அச்சிட்டு வைக்க வேண்டும். இதனை ஜூன் மாதம் 15-ஆம் தேதிக்குள் அனைத்து தனியார் பள்ளிகளும் கடைபிடித்திருக்க வேண்டும் என்று தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் டைரக்டர் எஸ்.சுகன்யா தெரிவித்திருக்கிறார்.

ஸ்கூல் பீஸ் எவ்வளவுன்னு நோட்டீஸ் போர்டுல வைங்க! தனியார் பள்ளிகளுக்கு அரசு வைத்த செக்!

அது மட்டுமின்றி பள்ளிக் கட்டண விபரங்கள் அனைத்தும் அந்த பள்ளியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். புதிய சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டிருந்தால், அந்த விண்ணப்பங்களிலேயே ஒவ்வொரு வகுப்பிற்கும் எவ்வளவு பள்ளி கட்டணம் வரும்? என்று அச்சிட்டு கொடுக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்குக் கூடுதலாக பள்ளியின் நோட்டீஸ் போர்டிலும் அனைத்து விவரங்களையும் காண்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் அறிவிப்போடு மட்டுமல்லாமல் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிக் கட்டண விபரங்கள் குறித்த தகவல்களை அந்தந்த பள்ளிகள் சரியாக பின்பற்றியிருக்கிறதா? என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கான முறையான அறிக்கையை 2026-ஆம் ஆண்டின் ஜூன் 10-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பள்ளிகள் பள்ளி கட்டணம் போர்டை வைத்திருக்கிறதா? என்பதை அரசுக்கு ஆதாரமாக சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் அதற்கான ஒப்புதல் கடிதத்தையும் பெற்று அரசு அலுவலக ஆவணங்களில் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பள்ளிகள், அரசின் அறிவிப்பை முறையாக பின்பற்றுகிறதா? என்பதற்கான ஆதாரமாக அமையும் என்று தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் டைரக்டர் சுகன்யா கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+