மத்திய அரசின் கீழ் செயல்படும் NSSO அமைப்பு வெளியிடப்பட்ட 2022-23 ஆம் ஆண்டுக்கான வீட்டு உபயோகப் பொருட்கள் செலவினக் கணக்கெடுப்பு (HCES) குறித்த அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை வர்த்தக துறைக்கு மிகவும் முக்கியமானது, காரணம் HCES அறிக்கை மூலம் நாட்டில் எந்த மாநிலத்தில் தனிநபர் செலவினம் அதிகமாக இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள முடியும்.
அதாவது தனிநபர் வருமானம் (Per capita income) போல் தனிநபர் செலவினம் (per capita expenditure) அது ஒரு மாநிலத்தில் அல்லது நாட்டில் ஒரு தனிநபரின் சராசரியாகச் செலவு செய்யும் அளவீட்டைக் காட்டுகிறது. இது நகரம், கிராமம் என இரண்டு பிரிவில் கணக்கீடு செய்யப்பட்டு ஆய்வறிக்கையாக வெளியிட்டுள்ளது NSSO.

இது வர்த்தக சந்தைக்கு ஏன் முக்கியம் என்றால் எந்த மாநிலத்தில் மக்கள் அதிகமாகச் செலவு செய்கிறார்களோ, அந்த மாநிலத்தில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது மூலம் அதிகப்படியான வர்த்தகத்தையும் லாபத்தைப் பெற முடியும். இதேபோல் ஒரு மாநிலத்தில் மக்களின் சராசரி செலவின தொகை அதிகமாக இருப்பின் அம்மாநிலத்தில் மக்களின் வருமானமும் அதிகம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பது போல.
இந்த வகையில் இந்தியாவில் அதிக per capita expenditure கொண்டுள்ள முதன்மையான மாநிலத்தில் தமிழ்நாடும் ஒன்று. இதேபோல் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதது போல் ஒரு சிறப்பான விஷயம் தமிழ்நாட்டில் உள்ளது, இதுதான் தற்போது இந்தியா முழுக்க பேசும் முக்கியமான விஷயமாக மாறியுள்ளது.
NSSO அமைப்பு வெளியிடப்பட்ட 2022-23 ஆம் ஆண்டுக்கான வீட்டு உபயோகப் பொருட்கள் செலவினக் கணக்கெடுப்பில் (HCES) கர்நாடகா மற்றும் ஹரியானா மாநிலங்களில் நகர்ப்புறங்களில் சராசரி செலவினம் அதிகமாக இருந்தாலும், கேரளா மற்றும் பஞ்சாபில் கிராமப்புறங்களில் அதிகமாக உள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில், கிராமப்புறங்களில் ரூ.5,310 மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.7,630 என இரண்டிலும் அதிக செலவினம் (MPCE) கொண்டு உள்ளது. இது தேசிய சராசரியை விட பெரிய அளவில் அதிகமாகும். தமிழ்நாட்டின் நகர்ப்புற-கிராமப்புற செலவினத்திற்கு மத்தியிலான வேறுபாடு வெறும் 44% ஆகும், இது தேசிய அளவில் சராசரியில் 71% ஆக உள்ளது.
இந்தியாவின் சராசரி அளவு கிராமப்புறங்களில் ரூ.3773 மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.6,459 ஆக உள்ளது. தெலுங்கனாவில் நகர்ப்புறத்தில் இதன் அளவு 8158 ரூபாயாக உள்ளது, கர்நாடகாவில் 7666 ரூபாயாக உள்ளது.
இந்த தரவு, சமூகத்தின் கீழ்நிலை மக்களின் சமூக முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்று centre for indigenous knowledge system-ன் இயக்குநர் ராமு மணிவண்ணன் கருத்து தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு காரணங்களால் சமூக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் செலவின வடிவங்கள் வரலாற்று ரீதியாக அடிப்படையானவை. ஆடை மற்றும் உணவு ஆகியவற்றில் பணக்காரர் மற்றும் ஏழைகள் இடையே உள்ள வேறுபாடு எப்போதும் குறைவாகவே இருந்து வருகிறது. குறிப்பாக தற்போது இளைய தலைமுறையினர் மத்தியில், லைப்ஸ்டைல் மாற்றம் காரணமாக இதில் இருக்கும் வேறுபாடு குறைந்து வருகிறது.
அதே நேரத்தில், கிராமப்புற வேலைவாய்ப்பை மேம்படுத்தவும், வேளாண் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம் கிராமப்புற-நகர்ப்புற இடைவெளியைக் குறைக்க முடியும்.
இந்த ஆய்வறிக்கை செலவின மற்றும் செலவு முறைகளைக் காட்டுவது மட்டுமல்லாமல், HCES என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கான அறிகுறியாகும், மேலும் வறுமை, ஏற்றத்தாழ்வுகள் போக்குகள் மற்றும் பணவீக்கம் ஆகியவற்றை மதிப்பிடுவதற்கான முதன்மை ஆதாரமாகும் என்று சென்னைப் பொருளியல் பள்ளியின் இயக்குநர் கே.ஆர். சண்முகம் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications