தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட போனஸ் தொகை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழர் திருநாளான பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாட உதவும் என்று அரசு தெரிவித்துள்ளது.
நேற்று தமிழ்நாடு அரசு 2026 பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவிப்பை வெளியிட்ட நிலையில், 2026ஆம் ஆண்டின் முதல் நாளில் பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது.

போனஸ் விவரங்கள்
சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 என்ற அதிகப்பட்ச போனஸ் தொகை வழங்கப்படும். மேலும் தொகுப்பு ஊதியம் அல்லது சிறப்பு கால முறை அடைப்படை பணியில் ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு ரூ.1,000 போனஸ் அளிக்கப்படும். 2024-2025 நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்த முழு நேர மற்றும் பகுதி நேர பணியாளர்களும் இதில் உள்ளடங்குவர் என அரசின் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
ஓய்வூதியதாரர்களுக்கான போனஸ்
'சி' மற்றும் 'டி' பிரிவு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகை ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1,000 பொங்கல் போனஸ் தொகையாக வழங்கப்படும். இந்த போனஸ் தொகை அனைத்தும் பண்டிகை செலவுகளுக்கு உதவும் வகையிலும், ரீடைல் பணவீக்கம் அடிப்படையிலும் கணக்கிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் அரசின் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த போனஸ் அறிவிப்பால் ஏறத்தாழ 9.90 லட்சம் பேர் பயனடைவார்கள். இதற்காக தமிழ்நாடு அரசு சுமார்வ 183.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை, வேளாண்மை வளர்ச்சி தொடங்கி தொழில்துறை வளர்ச்சி வரை, பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் முதல் நான் முதல்வன் வரை, மகளிருக்கு உரிமைத்தொகை தொடங்கி மாணவர்களுக்கு புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் வரை போன்ற திட்டங்களை செயல்படுத்தும் ஊழியர்களுக்கு இது அங்கீகாரமாக அமையும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications