தமிழ்நாடு அரசு தைப்பொங்கல் பண்டியை முன்னிட்டு மக்களுக்கு சிறப்பு பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்க பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில் டோக்கன் வழங்கப்பட்டு தற்போது மக்கள் பெற்று வருகின்றனர்.
இந்த அறிவிப்பு மூலம் தமிழ்நாட்டில் இருக்கும் 2,22,91,710 (2.2 கோடி)குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும், பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.3,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையின் படி, 10.01.2026 காலை 10 மணி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் உள்ள 24,924 நியாய விலைக் கடைகளில் 1,11,61,979 (1.1 கோடி) குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த ரூ.3,348.59 கோடி தொகை விநியோகிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.
2 நாளில் 1.1 கோடி குடும்பங்களுக்கு இந்த சிறப்பு தொகுப்பு மற்றும் ரொக்க தொகை வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. மேலும் இந்த இவை அரிசி குடும்ப அட்டை கொண்டவர்களுக்கு மட்டும் அளிக்கப்படுகிறது. மேலும் மாநிலம் முழுவதும் சமத்துவ பொங்கல், கல்லூரி மற்றும் பள்ளிகளில் பொங்கல் பண்டிகையும் களைகட்டியுள்ளது.
டோக்கன் முறை மூலம் சீரான விநியோகம்
நியாய விலைக் கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு டோக்கன் முறை அமல்படுத்தப்படுத்தி வருவது போல் இந்த ஆண்டும் அடை செயல்படுத்தியுள்ள காரணத்தால் பெரும்பாலான நியாய விலைக் கடைகளில் கூட்ட நெரிசல் இல்லை.
04.01.2026 முதல் 07.01.2026 வரை நியாய விலைக் கடை பணியாளர்கள் மூலம் டோக்கன்கள் வழங்கப்பட்டன. முதல் நாளில் 200 குடும்பங்களுக்கும், அடுத்த நாட்களில் 300 முதல் 400 குடும்பங்களுக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டன. 8ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பொருட்களும், ரொக்க தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
8ஆம் தேதி துவக்கம்
முதலமைச்சர் ஸ்டாலின் 8ஆம் தேதியன்று சென்னை பட்ரோடு நியாய விலை கடையில் பொங்கல் பொருட்களும், ரொக்க தொகை விநியோகத்தை தொடங்கி வைத்தார். துணை முதலமைச்சர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை TUCS கடையிலும், மாவட்டங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாகவும் மாநிலம் முழுவதும் ரேஷன் கடையில் தொடக்க விழா நடைபெற்றது.

பொங்கல் பரிசு வரலாறு
கடந்த 5 ஆண்டுகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்படியிருந்தது..?
2022 முதல் 2026 வரையிலான பரிசுத் தொகுப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ரொக்கப் பரிசின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது.
2022ஆம் ஆண்டில் பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் உள்ளூர் 21 வகையான கொண்டைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. அப்போது ரொக்கப் பரிசு இல்லை.
2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு ஆகியவை அடங்கிய தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 2025இல் மீண்டும் ரொக்கப் பரிசு இல்லாமல் பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு (2026) பொங்கல் பரிசுத் தொகுப்பு மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகமாகும்.
இந்த ரொக்கப் பரிசு உயர்வு மக்களின் பண்டிகை செலவுகளை கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு இந்தப் பரிசு பெரிதும் உதவும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications