தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் 100 நாள் வேலை திட்டத்தில் சென்ற 2024-ஆம் ஆண்டில் 319 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கூடுதலாக 17 ரூபாய் உயர்த்தி 336 ரூபாய் தரவிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இச்செய்தி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் நிதி ரீதியாக யாரையும் சார்ந்திருக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அரசு எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் கீழ் முத்ரா கடன்கள், சுய உதவி குழுக்கள் என பல திட்டங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த 100 நாள் வேலை திட்டமும் வழங்கப்படுகிறது.
இத்திட்டம் பெண்களின் வாழ்வை மாற்றுவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. 100 நாள் வேலை திட்டம் என்பது கிராமங்களில் வாழும் மக்களைக் கருத்தில் கொண்டு மத்திய அரசால் 2005-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இத்திட்டத்தின் சீர்மிகு செயல்பாட்டின் காரணமாக 2008 முதல் 2009-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் விரிவுபடுத்தப்பட்டு பெரும் வளர்ச்சியை அடைந்து வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பெண்களின் வாழ்வியல் தரம் பெருமளவில் உயர்ந்துள்ளது. அவர்கள் வாழும் இடத்திற்கு அருகிலேயே 100 நாள் வேலை திட்டம் வழங்கும் ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. கிராமங்களை சுற்றியுள்ள பொது சொத்துக்களான கிராமப்புற குளங்கள், கிராமப்புற கிணறுகள், சாலைகள் என அனைத்தையும் கிராமத்தில் வசிக்கும் பெண்களை வைத்தே சுத்தப்படுத்துவது தான் இந்த 100 நாள் வேலை திட்டம்.
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஆதரவற்றோர், வயதானவர்கள், வெளியூர்களுக்கு சென்று வேலை பார்க்க முடியாதவர்கள் குறிப்பாக பெண்கள் பயனடைய முடியும். தொடரும் பணவீக்கத்திற்கு எதிராக பாதுகாப்பக இருக்க 100 நாள் வேலை திட்டத்தின் சம்பளத்தை உயர்த்தி தருமாறு பெண்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு தமிழ்நாட்டில் 100 நாள் வேலைக்கான ஊதியத்தை 319 ரூபாயிலிருந்து 336 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
இந்த புதிய விதி ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி பிற மாநிலங்களும் 100 நாள் வேலை திட்டத்தின் சம்பளத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. ஹரியானாவில் கூடுதலாக 26 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இனி அம்மாநில மக்களுக்கு ஒரு நாள் சம்பளமாக 100 நாள் வேலைத்திட்டத்தில் 400 ரூபாய் வழங்கப்படும். இதன் தொடர்ச்சியாக பிற மாநிலங்களும் 100 நாள் வேலைக்கான சம்பளத்தை உயர்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications