தமிழ்நாடு, இந்தியாவில் மின்னணு பொருட்கள் (Electronics Goods) ஏற்றுமதியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. 2023-24 நிதியாண்டில், 11 மாதங்களில் மட்டும், தமிழகம் 12.62 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.05 லட்சம் கோடி) மதிப்புள்ள மின்னணு பொருட்கள் ஏற்றுமதி செய்து புதிய சாதனையை எட்டியுள்ளதாக வர்த்தக போர்ட்டல் NIRYAT (National Import-Export Record for Yearly Analysis of Trade) தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், இந்தியாவின் மொத்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை இந்தியாவின் மொத்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 34.02 பில்லியன் டாலர் மதிப்பில் தமிழ்நாடு 37.09% பங்கைக் கொண்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு, 2027-28க்குள் ஆண்டுதோறும் 20-22 பில்லியன் டாலர் (ரூ1.6 - ரூ1.8 லட்சம் கோடி) மின்னணு பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நிலையை அடையும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அதாவது, தமிழ்நாட்டின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 2023-24 நிதியாண்டின் பிப்ரவரி மாதம் வரை 12.6 பில்லியன் டாலர் என்ற புதிய சாதனையை எட்டியுள்ளது. நாங்கள், இப்போது அதிக மதிப்புள்ள மின்னணு கூறுகளை உற்பத்தி செய்வதில் விரைவாக முன்னேறி வருகிறோம் என்றும் மேலும், தமிழ்நாடு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாக மட்டுமல்லாமல், உயர் மதிப்புள்ள மின்னணு உற்பத்திக்கும் மையமாக மாறி வருகிறது," என தொழில் அமைச்சர் TRB ராஜா, எக்னாமிக் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மார்ச் 31, 2024 முடிவடைந்த நிதியாண்டில், தமிழ்நாட்டின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி ஒப்பந்த மதிப்பு 9.56 பில்லியன் டாலர்கள் என பதிவாகியுள்ளது. இது கர்நாடகா (4.60 பில்லியன் டாலர்) மற்றும் உத்தரப் பிரதேசம் (4.46 பில்லியன் டாலர்) ஆகியவற்றை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும். இதுமட்டுமல்லாமல், இந்த நிதியாண்டில் (ஏப்ரல் 2023 - மார்ச் 2024) தமிழ்நாடு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் மேலும் முன்னேற்றம் கண்டுள்ளது. அதன்படி, கர்நாடகா 6.88 பில்லியன் டாலருடன் இரண்டாவது இடத்திலும், உத்தரப் பிரதேசம் 4.69 பில்லியன் டாலருடன் 3வது இடத்திலும் உள்ளது.
அமைச்சர் ராஜா மேலும் கூறுகையில், "நாங்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். இது மாநிலத்தில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும், என்று தெரிவித்தார். தமிழ்நாடு குறைந்த மதிப்புள்ள உற்பத்தி மற்றும் செயலியக்கத்தை ஏற்கனவே முழுமையாக கைப்பற்றியுள்ளது என்றும் "மற்ற மாநிலங்கள் தற்போதுதான் மின்னணு உற்பத்தி சூழலுக்கு நுழைந்து, அதிக அளவிலான ஊக்குவிப்புகளால் நிறுவனங்களை ஈர்க்க முயற்சிக்கின்றன. ஆனால், தமிழ்நாடு தனது ஊக்குவிப்புகளை semiconductor மற்றும் மற்றும் மேம்பட்ட மின்னணு கூறு உற்பத்தியாளர்களை நோக்கி, உயர்தர வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் வழியில் செல்கிறது என்று கூறினார்.
முன்னதாக, இந்த மாதத்தின் தொடக்கத்தில், மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பிள்ளைப்பாக்கம் (காஞ்சிபுரம்), மணலூர், (திருவள்ளூர்) ஆகிய இடங்களில் ரூ.1,112 கோடி செலவில் இரண்டு புதிய மின்னணு உற்பத்தி கிளஸ்டர்கள் தமிழ்நாட்டில் நிறுவப்படும் என்று அறிவித்தார். "ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் இந்த கிளஸ்டர்களுக்காகப் போட்டியிட்டு வருகின்றன, மேலும் அவற்றுக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றன, ஆனால் தமிழ்நாடு உற்பத்தியில், குறிப்பாக மின்னணு சாதனங்களில் மிகவும் முன்னணியில் உள்ளது என்பதை மத்திய அரசு அங்கீகரிக்கிறது," என்று தமிழக அரசு அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளது.
"தமிழ்நாடு உலகளாவிய மின்னணு விநியோக சங்கிலியில் முக்கிய இணைப்பாக உருவாகும் நிலையில் உள்ளது," என சைபர்மீடியா ரிசர்ச் (CyberMedia Research) நிறுவனத்தின் தொழில் ஆய்வு குழு துணைத் தலைவர் பிரபு ராம் தெரிவித்தார். "இது மிகவும் வளர்ச்சியடைந்த மின்னணு உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பு, நிலையான அரசியல் சூழல் மற்றும் நிலையான அடிப்படை வசதிகள் மற்றும் நிலம், விமானம் மற்றும் துறைமுக இணைப்புகளை உள்ளடக்கிய வலுவான உட்கட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவால் முன்னோக்கி செல்லும் என்றும் பிரபு ராம் மேலும் தெரிவித்தார்.
தொடர்ச்சியான வளர்ச்சி வேகத்துடன், தமிழ்நாடு 2027-28க்குள் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 20-22 பில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை எட்டும் பாதையில் உள்ளது என்றும், அதன் வலுவான உற்பத்தித் தளம், உயர்மதிப்புள்ள கூறுகள் உற்பத்தியில் அதிகரிக்கும் முதலீடுகள், மற்றும் விரைவாக வளர்ந்து வரும் செமிகண்டக்டர் சுற்றுச்சுழல் முக்கிய ஆதரவாக அமையும், என்றும் பிரபு ராம் தெரிவித்தார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications