தமிழ்நாடு முழுவதும் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தீவிரமாக தயாராகி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் ரேஷன் அட்டைதாரர்களூக்கு தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 35,000-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. பொதுவாக மாதத்தின் முதல் மற்றும் 2வது வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளாகும். அந்த வாரங்களில் ஞாயிற்று கிழமைகளில் ரேஷன் கடைகள் செயல்படும். வேலைக்கு செல்வோர் ரேஷனில் பொருட்களை வாங்க ஏதுவாக இந்த விடுமுறை கடைபிடிக்கப்படுகிறது.

ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக நவம்பர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை , கடைகள் வழக்கம் போல இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பண்டிககை நேரத்தில் ரேஷன் கடைகளில் மக்கள் நெரிசலை தவிர்க்கவும் மாதாந்திர ரேஷன் பொருட்களை பொதுமக்கள் முன்கூட்டியே வாங்கி செல்லவும் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தமிழக அரசு தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 9-ம் தேதி (திங்கட்கிழமை) ரேஷன் கடைகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவித்துள்ளது. எனவே ஞாயிறு, திங்கள் என இரண்டு நாட்களுக்கு ரேஷன் கடைகள் இயங்காது என்பதால் வெள்ளிக்கிழமையான இன்று ரேஷனில் மக்கள் வழக்கம் போல பொருட்களை வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் மாத ஓய்வூதியம் பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு இது தடையில்லாமல் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தீபாவளிக்குள் இலவச வேட்டி, சேலை வழங்கும் பணிகளை முடிக்க வேண்டியும், பொதுமக்களுக்கு நவம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வழங்கிடவும் இன்று ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படுகின்றன, எனவே இதுவரை இலவச வேட்டி, சேலை வாங்காத முதியவர்கள் இன்று ரேஷன் கடைக்கு சென்று வாங்கி கொள்ளலாம்.
சனிக்கிழமையான நாளையும் ரேஷன் கடைகள் செய்லபடும். இருந்தாலும் கடைசி நாள் என்பதால் கூட்டமாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே இன்றே ரேஷனுக்கு சென்று இலவச வேட்டி, சேலைகளை வாங்குவது நல்லது. அதே போல ரேஷனில் இந்த மாதம் பொருட்களை வாங்காதவர்கள் இன்று கடைக்கு சென்று அரிசி உள்ளிட்டவற்றை வாங்கலாம். தீபாவளிக்கான முறுக்கு, அதிரசம் உள்ளிட்டவற்றை செய்ய இது உதவியாக இருக்கும். மேலும் சொந்த ஊருக்கு செல்வோர் முன்கூட்டியே ரேஷன் பொருட்களை வாங்கி வைத்து விட்டு, பயணத்தை திட்டமிடலாம்.


Click it and Unblock the Notifications

