தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) மாநிலத்தின் பல்வேறு பிரிவின் கீழ் மின் கட்டணத்தை திருத்தியுள்ளது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) செய்திக்குறிப்பு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட நிதி இழப்புகளை ஈடுகட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு மின்சாரம் கட்டணம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்துவது, அடுக்குமாடி குடியிருப்புகள், சிறு குறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் என மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மின்சார கட்டணங்களில் சுமார் 4.83 சதவீத உயர்வு ஏற்பட்டுள்ளது.

அதன்படி வீட்டு உபயோகத்திற்கு கட்டணம் 20 காசுகள் முதல் 55 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மாற்றம் செய்யப்பட்ட இந்தப் புதிய கட்டணங்களின்படி, வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.5 முதல் ரூ.40 வரை பல்வேறு பிரிவினருக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடுகளின் கீழ் எத்தனை யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்த பிரிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இந்தக் கட்டணங்கள் மாறுபடலாம். இதில், இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 லட்சம் வீட்டு மின்சார நுகர்வோருக்கு மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.5 மட்டுமே கூடுதலாக இருக்கும். அதாவது முன்பு ஒரு யூனிட்டுக்கு 4.60-ஆக இருந்த கட்டணம் தற்போது ஒரு யூனிட்டுக்கு ரூ. 4.80-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இலவச மின்சாரம்: அனைத்து வீட்டு நுகர்வோருக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரமும், கைத்தறி, விவசாயம், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றுக்கு கிடைக்கும் மானியங்கள் இந்த மின்சாரக் கட்டான உயர்வால் தடைபடாது என்றும் கூறப்படுகிறது.
இரண்டு மாதங்களுக்கு 300 யூனிட்கள் வரை பயன்படுத்தும் 35 லட்சம் உள்நாட்டுப் பயனர்களுக்கான புதிய கட்டணமானது மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.15 ஆக இருக்கும். இரண்டு மாதங்களுக்கு 400 யூனிட்கள் மற்றும் 500 யூனிட்கள் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கான மின்சாரக் கட்டணம் மாதம் ரூ.25 மற்றும் ரூ.40-ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோ மற்றும் ஹை வோல்டேஜ் மின்சாரத்தைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கான மின்சார கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 35 பைசா அதிகரித்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications