தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.3000 கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் வேளையில் தமிழக மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதேபோல் ஒவ்வொரு மாதமும் கிடைக்கம் மகளிர் உரிமைத் திட்டத்தின் 2வது கட்டத்தை நாளை முதல்வர் முக.ஸ்டாலின் துவக்கி வைக்கும் நிலையில் கூடுதலாக பல லட்சம் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்.
இதன் மூலம் ஜனவரி மாதம் பொங்கல் பரிசுத் தொகையாக 3000 ரூபாயும், மகளிர் உரிமைத் தொகை தவணையாக 1000 ரூபாய் என மொத்தம் 4000 ரூபாய் தொகை பல கோடி குடும்பங்களுக்கு கிடைக்க உள்ளது. இந்த தொகையை செலவு செய்யாமல் சரியாக திட்டமிட்டு முதலீடு செய்தால், பெரும் தொகையை சேர்க்க முடியும். இந்த முதலீடு பணவீக்கத்தை வென்று நீண்டகால சேமிப்பாகவும் மாற்ற முடியும்.

சிறிய தொகை என்றாலும், திட்டமிட்டால் பெரிய லாபம் தரும் வழிகள் ஏராளம் உள்ளன. ரூ.4000ஐ முழுவதுமாக ஒரே இடத்தில் போட விரும்புபவர்கள் அஞ்சல் அலுவலக சேமிப்பு, வங்கி வைப்பு நிதி (FD) அல்லது ரெக்கரிங் டெபாசிட் (RD) தேர்வு செய்யலாம்.
தற்போது வங்கி வைப்பு நிதியில் 5 ஆண்டுக்கு 7-7.5 சதவீத வட்டி கிடைக்கிறது. ரூ.4000 போட்டால் 5 ஆண்டுகளில் ரூ.6000க்கு மேல் ஆகும். இதுவே ரெக்கரிங் டெபாசிட்டில் மாதம் ரூ.333 போட்டாலும் போதும், 5 ஆண்டுகளில் நல்ல தொகை கிடைக்கும்.
பொங்கல் பரிசுத் தொகை மற்றும் மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு வருடமும் கிடைக்கும் தொகை என்பதால் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்தையும் தேர்வு செய்யலாம். இந்த திட்டத்தில் செய்யப்பட்டும் முதலீட்டுக்கு 7.1 சதவீத வரி இல்லா வட்டி தருகிறது, ஆனால் 15 ஆண்டு காலம் லாக் இன் காலம் உள்ளது. இவை மூலதனத்தை பாதுகாத்து நிலையான வருமானம் தரும். மேலும் பொங்கல் பரிசுத் தொகை ஒவ்வொரு வருடத்திற்கும் மாறுப்படலாம் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
மியூச்சுவல் பண்ட்
ரூ.4000ஐ ஒரே தொகையாக (lump sum) போட விரும்பினால், அதேபோல் ரிஸ்க் எடுக்க விரும்பினால் மியூச்சுவல் பண்ட் பிரிவில் ஃப்ளெக்ஸி கேப் அல்லது ஸ்மால் கேப் மியூச்சுவல் பண்ட் சிறந்த தேர்வாக இருக்கும். இதை நீங்கள் வீட்டில் இருந்துக்கொண்டே Groww, Zerodha Coin போன்ற ஆப்-கள் வாயிலாக ரூ.100 முதல் உங்களுடைய முதலீட்டை தொடங்கலாம். கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற ஃபண்டுகள் 12-18 சதவீத வரை வருமானம் தந்துள்ளன.
ரூ.4000 ஒரே தொகையாக போட்டு 7-10 ஆண்டுகள் வைத்திருந்தால் ரூ.12,000 முதல் ரூ.20,000 வரை ஆக வாய்ப்புள்ளது. ரிஸ்க் இருந்தாலும் நீண்டகாலத்தில் பணவீக்க பாதிப்பை குறைத்து பெரிய லாபம் பெறலாம். வைப்பு நிதி போல் உறுதியான லாபம் கிடைத்தாலும், இந்த முதலீட்டில் ரிஸ்க் உள்ளது, ஆனால் முதலுக்கு மோசம் ஆக வாய்ப்பு மிக குறைவு.
பங்குச் சந்தை
ரிஸ்க் எடுக்க தயாரானவர்கள் பங்குச் சந்தையில் நல்ல நிறுவன பங்குகளை வாங்கலாம். பங்குச் சந்தைக்கு Groww, Zerodha போன்ற ஆப்புகள் மூலம் ரூ.4000ஐ நல்ல நிறுவன பங்குகளில் பிரித்து போடலாம்.
தங்கம்
தங்க ETF அல்லது தங்கம் காயின் வாங்கி வைக்கலாம். தங்கம் கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 12 சதவீதம் உயர்ந்துள்ளது. ரூ.4000இல் 1 கிராம் தங்க நாணயம் வாங்கி வைத்தால் பாதுகாப்பும் லாபமும் கிடைக்கும்.
சிறிய தொகையை பெரிதாக்க எளிய உத்தி
ரூ.4000 ஒரே தொகையாக முதலீடு செய்யாமல், ரூ.2000 FD அல்லது RDயில், ரூ.2000 மியூச்சுவல் ஃபண்ட் SIPயில் போடலாம். இது ரிஸ்க்கை சமநிலைப்படுத்தும். மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1000 கிடைப்பதால், அதை RD அல்லது SIPயில் தொடர்ந்து போட்டால் ஆண்டுக்கு ரூ.12,000 சேமிப்பாக மாற்றலாம். இது குழந்தை கல்வி, மருத்துவம், வீடு வாங்குதல் போன்ற இலக்குகளுக்கு உதவும்.
ரூ.4000 சிறிய தொகை என்றாலும் சரியாக திட்டமிட்டால் எதிர்காலத்தில் பெரிய சேமிப்பாக மாற்ற முடியும். ரிஸ்க் எடுக்க தயங்குபவர்கள் FD, RD, SCSS தேர்வு செய்யலாம். கொஞ்சம் ரிஸ்க் எடுக்க தயாரானவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் அல்லது தங்கத்தில் முதலீடு செய்யலாம். எந்த திட்டத்தையும் தேர்வு செய்வதற்கு முன் உங்கள் காலக்கெடு, ரிஸ்க் திறன், இலக்குகளை கருத்தில் கொள்ளுங்கள். இந்த சிறிய தொகையை வீணாக்காமல் முதலீடு செய்தால், கட்டாயம் பலன் தரும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications