என்ன பெரிய குஜராத், மகாராஷ்டிரா.. தமிழ்நாடு மாஸ் காட்டுது இந்த விஷயத்தில்..!!

டெல்லி: இந்தியாவில் மாதாந்திர குடும்ப செலவினத்தில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் ஒட்டு மொத்த நாட்டின் சராசரியை விட அதிக பங்கு வகிப்பது தெரியவந்துள்ளது.

மத்திய அரசு 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான வீட்டு நுகர்வு செலவின ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் மாதாந்திர நுகர்வு செலவினம் குறித்த சில சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் வசிக்கக்கூடிய ஒரு குடும்பம் சராசரியாக ஒரு மாதத்திற்கு 8,325 ரூபாயை செலவு செய்கிறது, அதுவே கிராமப்புறங்களில் வசிக்கக்கூடிய குடும்பம் 5,872 ரூபாயை செலவு செய்கிறது என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

என்ன பெரிய குஜராத், மகாராஷ்டிரா.. தமிழ்நாடு மாஸ் காட்டுது இந்த விஷயத்தில்..!!

2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை நாடு முழுவதும் உள்ள குடும்பங்களின் நுகர்வு செலவினம் குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்தி அந்த முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. நாட்டில் உள்ள குடும்பங்களின் சராசரி குடும்ப செலவினம் இந்த காலகட்டத்தில் 3.5 சதவீதம் உயர்ந்துள்ளது.

சராசரியாக இந்தியாவில் கிராமத்தில் இருக்கும் குடும்பம் மாதந்தோறும் 4,122 ரூபாயும், நகரத்தில் இருக்கும் ஒரு குடும்பம் 6,996 ரூபாயும் செலவு செய்கிறது.

அதிகபட்ச மாதாந்திர சராசரி செலவினம் மேற்கொள்ளும் மாநிலமாக சிக்கிம் முதலிடத்தில் இருக்கிறது. அதேபோல குறைந்தபட்ச செலவினம் மேற்கொள்ளும் மாநிலமாக சத்தீஸ்கர் மாநிலம் இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக 10 மாநிலங்களில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற செலவினம் தேசிய சராசரியை காட்டிலும் அதிகமாக உள்ளது. இதில் தமிழகம் உள்ளிட்ட ஐந்து தென் மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

அதிகளவிலான தொழிற்சாலைகள் இருக்கக்கூடிய குஜராத் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சராசரி குடும்ப செலவினம் தேசிய சராசரியை ஒட்டியே இருக்கிறது. மத்திய பிரதேசம், மேற்குவங்கம், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த குடும்பங்கள் தேசிய சராசரியை விட குறைவாகவே செலவு செய்கின்றன.

தென் இந்திய மாநிலங்களை பொறுத்தவரை குடும்ப செலவினங்களில் கேரளாவில் கிராமப்புறங்களை சேர்ந்த குடும்பங்கள் ஒரு மாதத்திற்கு சராசரியாக 6611 ரூபாயையும் நகர்ப்புறங்களை சேர்ந்த குடும்பங்கள் 7834 ரூபாயையும் செலவு செய்கின்றன. அதிகபட்சமாக ஆந்திர பிரதேச மாநிலத்தில் கிராமப்புறத்தை சேர்ந்த குடும்பங்கள் 6107 ரூபாயையும் நகர்ப்புறத்தை சேர்ந்த குடும்பங்கள் 9877 ரூபாய் செலவு செய்கின்றன.

குடும்ப நுகர்வு செலவின ஆய்வறிக்கை இந்திய குடும்பங்களின் பொருளாதார நிலை, வறுமை, வேலைவாய்ப்பு, நுகர்வு போக்கு உள்ளிட்ட பல விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+