சென்னை ECRல் உள்ள முட்டுகாடு படகு இல்லத்தில், தமிழ்நாடு சுற்றுலாத் துறை 5 கோடி ரூபாய் செலவில் "மிதக்கும் உணவகம்" என்ற கான்செப்ட்டில் கட்டியுள்ள கப்பலின் கட்டுமான பணிகள் முடிவடைந்து, திறப்பு விழாவுக்குத் தயாராக உள்ளது. இது சென்னை மக்களின் முக்கிய ஹாட்ஸ்பாட் ஆக இருக்கப்போகிறது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) மற்றும் கேரள மாநிலம் கொச்சி-யை அடிப்படையாக கொண்ட கிராண்டியர் மரைன் இன்டர்நேஷனல் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் PPP கூட்டமைப்பின் கீழ் இந்த "மிதக்கும் உணவகம்" கப்பல் கட்டப்பட்டது. இந்த கப்பல் குறித்து அதிகாரப்பூர்வ வீடியோ தற்போது வெளியாகி சென்னை மக்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.

கேரளாவில் மிகவும் பிரபலமான போட் ஹவுஸ் போலவே தமிழ்நாட்டிலும் கொண்டு வரும் முயற்சி தான் இந்த Seanz Cruise எனப்படும் மிதக்கும் உணவகம். இது தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத ஒரு புதிய முயற்சி என்பதால் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெரும் என எதிர்பார்ப்பு உள்ளது. இந்த மிதக்கும் உணவகம் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
"சீன்ஸ் குரூஸ்" (Seanz Cruise) என்று பெயரிடப்பட்ட இந்த மிதக்கும் உணவகம், 125 அடி நீளமும் 25 அடி அகலமும் கொண்ட இரு தளங்களைக் கொண்டது. இந்த கப்பல் முழுவதும் சென்டரலைஸ்டு ஏசி வசதி கொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications