2024 ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ள தமிழ்நாட்டின் உலக முதலீட்டாளர் உச்சி மாநாட்டிற்கான லோகோ இன்று வெளியிட்டப்பட்டது.
தமிழ்நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு, மக்களின் தனிநபர் வருமானம் வரையில் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான துவக்கமாக இன்று லோகோ வெளியிட்டப்பட்டது.மேலும் லோகோ வெளியிட்டின் வீடியோ கீழ் இணைக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு நடக்க உள்ளது. இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் கடந்த வருடம் முதல் நடத்தப்பட்டு வரும் வேளையில், தமிழ்நாடு அரசு இந்த கூட்டத்தில் அதிகப்படியான முதலீடுகளை ஈர்க்க ஸ்டாலின் உலக நாடுகளுக்கு கடந்த சில மாதங்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தும் முக்கிய இலக்குடன் தமிழ்நாடு அரசு இருக்கும் வேளையில் இந்த முதலீட்டு மாநாடு மாநிலத்தின் பொருளாதாரம், உற்பத்தி, வேலைவாய்ப்புக்கு முக்கிய வளர்ச்சி வாய்பை தரும். இந்த நிலையில் தான் உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு 2024-ன் லோகோவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

இதுக்குறித்து தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா டிவிட்டரில் கூறுகையில் இந்த பயணத்தின் ஆரம்பம் மிகவும் முக்கியமானது. அடுத்த சில மாதத்தில் இந்தியா முழுவதும் மற்றும் உலக நாடுகளில் #TNGIM24 என்ற சொல் பிரபலமாகும்.
உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு 2024 மூலம் கூட்டணியாளர்களை சேர்க்க, முதலீடுகளை ஈர்க்க, திட்டங்களை துவங்க, லேவைவாய்ப்புகளை உருவாக்க என உள்ளோம், இதன் மூலம் #TNGIM24 என்ற சொல் பிரபலமாகும். இதன் உச்சம் தான் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7, 8 ஆம் தேதியில் சென்னையில் முதலீட்டாளர்கள் சந்திப்பு முதல்வர் தலைமையில் நடக்க உள்ளது.

மேலும் இது என்னுடைய தனிப்பட்ட இலக்காகவும் உள்ளது, இந்த இலக்கை என்னுடைய தலைவர், முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கொடுத்தது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டும் அல்லாமல் 100 மதிப்பெண்களும் வாங்குவேன் என தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா டிவிட்டரில் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications