சென்னை: 2024 - 25 ஆம் ஆண்டில் தமிழ்நாடு 9.69 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் நாட்டிலேயே அதிக பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்த மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் மூலம் இந்த விவரம் வெளியாகி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த மிக உயர்ந்த வளர்ச்சி விகிதம் இது என சொல்லப்படுகிறது . இதற்கு முன்பு தமிழ்நாடு 2017 - 18 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 8.59 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. மத்திய அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி 2023 - 24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 15 , 71,368 கோடி ரூபாயாக இருந்தது. அதுவே 2024 - 25 ஆம் ஆண்டில் 17, 23 ,698 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 0.07 சதவீதமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் வளர்ச்சியும் எதிர்மறையாக தான் பதிவாகி இருந்தன. அப்போது தமிழ்நாடு மட்டுமே குறைந்தபட்ச நேர்மறை வளர்ச்சியை கொண்ட மாநிலமாக திகழ்ந்தது. பொதுவாக பணவீக்கத்தை கணக்கில் கொள்ளாமல் மதிப்பிடப்படும் வளர்ச்சி விகிதம் தான் உண்மையான வளர்ச்சி விகிதம் (real growth rate) என அழைக்கப்படுகிறது. பண வீக்கத்தையும் கணக்கில் கொண்டு மதிப்பிடப்படும் வளர்ச்சி விகிதம் பெயரளவு வளர்ச்சி விகிதம் (nominal economic growth rate) என கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் பெயரளவு வளர்ச்சி விகிதம் 2024-25 ஆம் ஆண்டில் 14.02 சதவீதமாகும், இந்த அளவிலும் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு தான் திகழ்கிறது .மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக இணையதளத்தில் உத்திரபிரதேசம், பீகார், குஜராத் உள்ளிட்ட 14 மாநிலங்கள் மாநிலங்களின் 2024-25 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி விகித தரவுகள் பதிவேற்றம் செய்யப்படவில்லை. தமிழ்நாடு அரசு முதன்முதலாக கடந்த மார்ச் மாதத்தில் பொருளாதார ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டு இருந்தது. அப்போது பொருளாதார ஆய்வு அறிக்கையின் முன் கணிப்பு வளர்ச்சி விகிதமும் ,மத்திய அரசு வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த உண்மை வளர்ச்சி விகிதமும் ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது .
தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்த துறைகளின் விவரங்களும் வெளியாகியிருக்கிறது. சேவைகள் துறை 12.7 சதவீத வளர்ச்சியும். இரண்டாம் நிலை துறை 9 சதவீத வளர்ச்சியும் பெற்றுள்ளன. முதன்மை துறையின் செயல்பாடு வெறும் 0.15 சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளது. மூன்றாம் நிலை துறையில் மனை வணிகம் 13.6 சதவீதம், தகவல் தொடர்பு ஒளிபரப்பு 13 சதவீதம், தங்கும் விடுதிகள் மற்றும் உணவுகள் 11.7 சதவீதம் என பங்களிப்பை தந்திருக்கின்றன.
இரண்டாம் நிலைத்துறையினை பொறுத்தவரை உற்பத்தி, கட்டுமானம் முறையே 8 சதவீதம் மற்றும் 10.6 சதவீதம் என வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. முதன்மை பிரிவுகளில் பயிர்த்தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த பிரிவுகள் எதிர்பார்த்த அளவு வளர்ச்சியை பெறவில்லை. தமிழ்நாடு தன்னுடைய வளர்ச்சி விகிதத்தை 9.7 சதவீதம் என்ற அளவிலேயே நீட்டித்து வந்தால் 2032 - 33 ஆம் ஆண்டில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கினை எட்டி விடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications