சென்னை: சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் தமிழ்நாடு புதிய சாதனையை படைத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான tangedco வெளியிட்டுள்ள தகவலின் படி செப்டம்பர் 12 ஆம் தேதி தமிழ்நாட்டில் சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 6,090 மெகாவாட் என்ற அளவை எட்டியுள்ளது. இது புதிய சாதனை என tangedco தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக சூரிய சக்தியின் மூலம் செப்டம்பர் 7ஆம் தேதி 5985 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. அதுதான் சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை மிஞ்சப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சோலார் சூரியசக்தி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தின் நுகர்வும் செப்டம்பர் 12ஆம் தேதி புதிய உச்சத்தை எட்டி இருப்பதாக tangedco கூறுகிறது.

அதாவது செப்டம்பர் 2ஆம் தேதி சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தின் நுகர்வு 43.70 மில்லியன் யூனிட்களாக இருந்தது. அது செப்டம்பர் 12ஆம் தேதி 45.47 மில்லியன் யூனிட்டுகள் என உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சூரிய சக்தியிலிருந்து 7,800 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கிறது. நடப்பு ஆண்டில் 2024 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரை தமிழ்நாட்டில் 521 .73 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் சூரிய சக்தியின் மூலம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உச்சபட்ச மின்சார தேவை என்பது ஒரு நாளைக்கு 18,115 மெகாவாட்டாக இருக்கிறது. தினந்தோறும் நுகரப்படும் மின்சாரத்தின் அளவு சுமார் 400 மில்லியன் யூனிட்டுகள் ஆகும்.
2024- 25 ஆம் ஆண்டில் கடந்த மே 2 ஆம் தேதி தமிழ்நாட்டில் மின்சாரத்தின் தேவை மிக அதிகபட்சமாக 20,830 மெகாவாட் என இருந்தது. அதேபோல ஒரு நாளைக்கு அதிகபட்சமாக மின்சாரம் நுகரப்படும் விகிதம் ஏப்ரல் 30ஆம் தேதி 454.320 மில்லியன் யூனிட்களாக இருந்தது.
அதிகபட்ச சூரிய மின் சக்தி உற்பத்திக்கான திறன் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் இருக்கிறது. வீட்டு மேற்கூரை மற்றும் பிற அமைப்புகள் என மொத்தம் 8,145.53 மெகா வாட் மின்சார உற்பத்திக்கான திறனை தமிழ்நாடு கொண்டுள்ளது.
ஜூன் 30, 2024, நிலவரப்படி, தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் 22,754 மெகாவாட் ஆகும். இதில் 10,789 மெகாவாட் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. பயோமாஸ் மூலம் 969 மெகாவாட் மின்சாரம் மற்றும் நீர் மின் திட்டங்கள் மூலம் 2178 மெகாவாட் மின் உற்பத்தி திறன்களை கொண்டுள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications