தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலினின் ஐரோப்பிய முதலீட்டு ஈர்க்கும் பயணம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் கடைசியாக 2 முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஹிந்துஜாவின் எலக்ட்ரிக் வாகன முதலீடு
இங்கிலாந்தை தளமாகக் கொண்டு இயங்கினாலும் இந்தியாவை பூர்விகமாக கொண்ட ஹிந்துஜா குழுமம், தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தி, எனர்ஜி சேமிப்பு அமைப்புகள் மற்றும் எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்காக 7,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த முதலீடு மூலம் 1,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

ஆஸ்ட்ராசெனெகா-வின் பார்மா விரிவாக்கம்
இதேபோல், உலகளாவிய மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராசெனெகா, சென்னையில் உள்ள தனது குளோபல் இன்னோவேஷன் அண்ட் டெக்னாலஜி மையத்தை 716 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கும் செய்வதாக அறிவித்துள்ளது. இது, கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் அவர்களின் மூன்றாவது முக்கிய முதலீடாகும்.
இந்த முதலீடுகள், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன மற்றும் பார்மா துறை வேகமாக வளர்ச்சி அடையும்.
தமிழ்நாடு அரசின் வெற்றி
ஐரோப்பிய ஒன்றியத்தில் நடைபெற்ற 'டிஎன் ரைசிங் ஐரோப்பா' முதலீட்டு முயற்சியின் ஒரு பகுதியாக முதல்வரின் இங்கிலாந்து பயணத்தின் போது, ஏழு ஒப்பந்தங்கள் மூலம் 8,496 கோடி ரூபாய் முதலீடு உறுதியளிக்கப்பட்டு, 2,293 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
இதேபோல், ஜெர்மனியில் பயணத்தின் போது 26 ஒப்பந்தங்கள் மூலம் 7,020 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டு, விண்வெளி, ஆழ்நிலை தொழில்நுட்பம், ரயில்வே, ஆட்டோமொபைல், மற்றும் மின்னணுவியல் துறைகளில் 15,320 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.

இதன் மூலம் முதல்வரின் ஐரோப்பிய பயணத்தில் மொத்தமாக, 33 ஒப்பந்தங்கள் மூலம் சுமார் 15,516 கோடி ரூபாய் முதலீடுகள் 17,613 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டு உள்ளது மிகவும் வெற்றிகரமாக முடித்துள்ளது தமிழ்நாடு அரசு.


Click it and Unblock the Notifications