ஒவ்வொரு மாநிலத்தின் வரி வருவாய் அதிகரிக்கும் போது அது உள்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு நல்ல அறிகுறியாக பார்க்கப்படும். அந்த வகையில் 2024 முதல் 2025-ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் வரி வருவாய் ரூ. 1,80,225.53 கோடியை எட்டியுள்ளது. இது 2024-ஆம் ஆண்டில் ரூ. 1,67,105.18 கோடியாக இருந்தது. அதிலிருந்து பார்க்கும்போது சுமார் 7.6% வரி வருவாய் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையின் (CAG) புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
எப்படி குடும்பங்களுக்குள் மாத செலவுகளை திட்டமிட பட்ஜெட் போடப்படுகிறதோ, அதேபோல அரசும் பட்ஜெட்டை பொறுத்து ஒரு வருடத்திற்கான வருமானம் மற்றும் செலவுகளை திட்டமிடும். அந்த வகையில் ஒவ்வொரு நிதியாண்டும் தொடங்கப்படுவதற்கு முன்பு.. அதாவது முந்தைய நிதியாண்டின் இறுதியில் அடுத்த நிதியாண்டில் எங்கிருந்து எவ்வளவு வருவாய் கிடைக்கும்? என எதிர்பார்க்கப்படுகிறதோ? அதையெல்லாம் பட்ஜெட் மதிப்பீடாக கருத்தில் கொள்ளும்.

இது ஒவ்வொரு நிதியாண்டும் தொடங்கும் போது போடப்படும் மதிப்பீடு. அந்த வகையில் 2026-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது வரி வருவாய் மூலம் ரூ. 1,95,173 கோடி கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் அதன் பின்னர் அரசு தனது வருவாய் செலவுகளை மீண்டும் ஆய்வு செய்து எதிர்பார்த்த வருவாய்க் கிடைத்திருக்கிறதா? அல்லது செலவுகள் அதிகரித்துள்ளதா என்பதை ஆய்வு செய்யும். இந்த ஆய்வின் அடிப்படையில் முதலில் போடப்பட்ட பட்ஜெட் மதிப்பீடுகளில் திருத்தங்கள் செய்யப்படும். இதை "ரிவைஸ்டு பட்ஜெட் எஸ்டிமேட்" என்று அழைப்பார்கள். 2024-25 ஆம் ஆண்டில், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் ரூ.1,92,752.43 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் வரி மூலம் கிடைக்கின்ற வருவாய் 75.3% பங்களிக்கிறது. மாநில சரக்கு மற்றும் சேவை வரி 2023 முதல் 2024-ஆம் ஆண்டில் ரூ. 61,960.29 கோடியாக இருந்தது. இந்த விகிதம் 2024 முதல் 2025-ஆம் நிதியாண்டில் ரூ.70,886.65 கோடியாக.. சுமார் 14.4 சதவீதம் அதிகரித்துள்ளது என்று சிஏஜி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் முத்திரை மற்றும் பதிவுக் கட்டணங்கள் மூலம் மாநிலத்திற்கு கிடைத்த வருவாய் 2024-ஆம் நிதியாண்டில் ரூ.19,013.36 கோடியாக இருந்தது. ஆனால் 2025-ஆம் நிதியாண்டில் ரூ.21,878.27 கோடியாக அதிகரித்துள்ளது. இது சுமார் 15 சதவீத அதிகரிப்பை சுட்டிக்காட்டுகிறது.
பெட்ரோல், டீசல், மதுபானம் போன்றவற்றின் மூலம் கிடைத்த வரி வருவாய் 2023 முதல் 2024-ஆம் ஆண்டில் ரூ.60,026.96 கோடியாக இருந்தது. இந்த வருவாய் 2024 முதல் 2025-ஆம் ஆண்டில் ரூ.62,335.08 கோடியாக அதிகரித்துள்ளது. மதுபான வருவாயைப் பிரதிபலிக்கும் மாநில கலால் வரிகள் 2023 முதல் 2024-ஆம் ஆண்டில் ரூ.10,774.29 கோடியிலிருந்து 2024 முதல் 2025-ஆம் ஆண்டில் ரூ.11,055.41 கோடியாக அதிகரித்துள்ளது.
மற்ற வரிகளில் இருந்து கிடைக்கும் வருவாய் 2024-ஆம் ஆண்டில் ரூ. 15,074.41 கோடியாக இருந்தது. ஆனால் இந்த வருவாய் 2025-ஆம் ஆண்டில் ரூ. 13,792.40 கோடியாக குறைந்துள்ளது. 2025-ஆம் ஆண்டிற்கான வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு ரூ. 52,491.88 கோடியாக உள்ளது. இது 2025-ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் கணிக்கப்பட்டதற்கு ஏற்ப அமைந்துள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications