தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெயிலும் மழையும் மாறி மாறி காணப்படுகிறது. வெயில் நிலவும் போது கடுமையான வெப்பம் நிலவுகிறது. இந்த கடுமையான வெப்பம் தமிழ்நாடு புதிய சாதனையை படைக்க உதவியுள்ளது. சூரிய மின் சக்தியில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி அன்று ஒரே நாளில் மட்டும் சூரிய மின் சக்தி மூலம் 5979 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய சாதனையான 5704 மெகாவாட்டை மிஞ்சியுள்ளது.
அதாவது கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி தான் தமிழ்நாட்டின் 5704 மெகாவாட் மின்சாரம் சூரிய மின்சக்தி மூலம் உற்பத்தி செய்யப்பட்டது. அப்போது இது சாதனையாக பார்க்கப்பட்ட நிலையில் அதை தாண்டி மேலும் ஒரு சாதனை படைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று 41.40 மில்லியன் யூனிட் மின்சாரம் அதிகபட்சமாக மின் கட்டமைப்பில் உட்கொள்ளப்பட்டுள்ளது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழ்நாட்டின் முதன்மை உறுதிப்படுத்துகிறது என மின்சார வாரியம் பெருமிதம் தெரிவித்துள்ளது. மின்சார உற்பத்தி மற்றும் உட்கொள்ளுதல் ஆகிய இரண்டுமே ஒரே நாளில் உச்சத்தை எட்டி உள்ளது என தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாள் முழுவதும் வெயில் காணப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் இரண்டாம் தேதி மின்சார தேவை என்பது 20 ஆயிரத்து 830 மெகாவாட் என உச்சத்தை எட்டி இருந்தது அதேபோல அதிகபட்சமாக கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி 454.32 மில்லியன் யூனிட் மின்சாரம் நுகரப்பட்டிருந்தது. இதனிடையே காற்றாலை மின் உற்பத்தி என்பது தற்போது குறைந்திருப்பதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 9 அன்று தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் 51.27 மில்லியன் யூனிட் மின்சாரம் உட்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது காற்றாலை மின் உற்பத்திக்கான காலம் என்றாலும் எதிர்பார்த்த அளவு அதில் மின்சாரம் உற்பத்தி ஆகவில்லை என தெரிவிக்கும் மின்சார வாரிய அதிகாரிகள் மழைக்காலங்களில் மின்சார தேவை என்பது குறைவாக இருக்கும் என்பதால் தற்போது இருக்கும் மின்சாரம் போதுமானதாக இருக்கிறது என தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று மட்டும் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 16,237 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டிருக்கிறது 352.20 மில்லியன் யூனிட் மின்சாரம் நுகரப்பட்டுள்ளது.
Written by: Devika
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications