தமிழ்நாடு பல விஷயத்தில் முன்னோடியாக இருப்பது போல் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு அரசு செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் பெரிய அளவிலான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்திற்காக சென்னையில் இந்தியாவின் முதல் முழு அமைப்புக்குமான Sovereign AI Park உருவாக்க பெங்களூரை சேர்ந்த சர்வம் AI நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட்டு உள்ளது தமிழ்நாடு அரசு. இந்த திட்டத்திற்கு ஐந்து ஆண்டுகளில் சுமார் 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. இது தமிழ்நாடு அரசு தலைமையில் நடைபெறும் மிகப்பெரிய AI உள்கட்டமைப்பு முதலீடுகளில் ஒன்றாக உள்ளது.

இன்று தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா, தொழில்துறை செயலாளர் அருண் ராய், கைடென்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் டாரேஸ் அஹமது, ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் வி.காமகோடி மற்றும் சர்வம் AI இணை நிறுவனர் பிரத்யுஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது தமிழ்நாட்டை SAAS தொழில்நுட்பத்தில் இருந்து AI தொழில்நுட்ப ஹப் ஆக மாற்றும் முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு பின்டெக், SAAS ஆகியவற்றில் முன்னோடியாக இருக்கும் வேளையில் தற்போது தேசிய அளவில் ஏஐ துறையில் முன்னணி மாநிலமாக மாற்றும் முக்கிய நடவடிக்கையாக இந்த Full-Stack Sovereign Al Park இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sovereign Al Park என்றால் என்ன?
இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஒரு ஏஐ சேவை பெரிய அளவில் இயங்குவதற்கு தேவையான அனைத்து உயர்தர AI கணினி உள்கட்டமைப்பு, பாதுகாப்பான தரவு அமைப்புகள், லாங்குவேஜ் மாடல் ஆராய்ச்சி ஆய்வகங்கள், AI இன்னோவேஷன் குழுக்கள் மற்றும் AI கவர்னென்ஸ் நிறுவனம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படும்.
இந்த Sovereign Al Park அமையும் பகுதி முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டிலும், பாதுகாப்பிலும் இருக்கும். இதேபோல் இந்த ஏஐ பார்க்கில் டேட்டா, மாடல், கம்பியூட் என ஏஐ கட்டமைப்பில் 3 முக்கிய பகுதிகளும் ஒரே இடத்தில் இருந்து இயக்கும் பாதுகாப்பான கட்டமைப்பையும், லாங்வேஜ் மாடலையும் இந்த ஏஐ பார்க்-ல் உருவாக்க முடியும்.
இந்த திட்டம் மூலம் 1000-க்கும் மேற்பட்ட ஹைடெக், டீப் டெக் வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியும். AI ஆராய்ச்சி, ஏஐ இன்பரா இன்ஜினியர்ஸ் போன்ற பல பகுதிகளில் இந்த வேலைவாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உலக தரத்திலான AI தொழில்நுட்பத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை அளிக்கும்.

ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி கூறுகையில், "AI தான் எதிர்கால வேலைவாய்ப்புகளை வரையறை செய்யும் என்பதால் இந்த சிறப்பு ஏஐ பூங்கா தமிழ்நாட்டு மாணவர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் AI நுகர்வோராக அல்லாமல் உலகளாவிய கிரியேட்டர் அல்லது டெவலப்பராக மாற்றும்" என கூறினார்.
சர்வம் AI நிறுவனம் இந்திய அரசின் IndiaAI திட்டத்தின் கீழ் நாட்டின் முதல் உள்நாட்டு லார்ஜ் லாங்குவேஜ் மாடலை (LLM) உருவாக்க தேர்ந்தெடுக்கப்பட்டது. இது இந்திய மொழிகள், குரல் மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றுக்கு ஏற்ற மாடல்களை உருவாக்க உதவும். இந்த பூங்காவில் சர்வம் AI நிறுவனத்திற்கு அடித்தளமாக அமையும்.
சர்வம் AI (Sarvam AI) என்பது இந்தியாவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்றாகும். 2023ஆம் ஆண்டு பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு விவேக் ராகவன் மற்றும் பிரத்யுஷ் குமார் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் இதுவரையில் 41 மில்லயன் டாலர் அளவிலான முதலீட்டை திரட்டியுள்ளது.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

16 வருஷமா பார்த்த வேலை இப்போ இல்ல.. ஒரே ஈமெயிலில் மாறி போன வாழ்க்கை.. கண்ணீர் சிந்தும் ஐடி ஊழியர்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications