இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு கல்வித்துறையில் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் விதமாக, Canva நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் Canva பயிற்சித் திட்டங்களை மூன்று வருடங்களுக்கு வழங்குவதற்காக, தமிழ்நாடு கைடென்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தமிழ்நாடு அரசு இன்றைய இளம் தலைமுறையினரை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும் நோக்கத்துடன் பல முயற்சிகளை செய்து வகுகிறது.
இந்த முயற்சியின் மூலம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் Canva-வின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி, டிஜிட்டல் எழுத்தறிவு மற்றும் காட்சித் தொடர்பு திறன்களைப் பெறுவார்கள். இதன் மூலம், தொழில்நுட்பம் சார்ந்த கற்றலை அரசுப் பள்ளிகளில் ஊக்குவித்து, அரசு பள்ளிகளின் வகுப்பறையும், மாணவர்களுக்கான புதிய வய்ப்பையும் மேம்படுத்த முடியும்.

இந்த கூட்டணியின் முக்கிய நோக்கம், தமிழக அரசுப் பள்ளிகளில் ஆக்கப்பூர்வமான, தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் முறைகளை அறிமுகப்படுத்தி, மாணவர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்துவதாகும். இந்த ஒப்பந்தம் மூலம் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களின் படைப்பாற்றலை வளர்ப்பதோடு, ஆசிரியர்களுக்கு நவீன கற்பித்தல் முறைகளை அறிமுகப்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், தமிழ்நாடு கல்வித்துறையில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கும் என நம்பலாம்.
இதேவேளையில் தமிழ்நாடு 2025 இறுதிக்குள் முழு கல்வியறிவை எட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மத்திய அரசின் 2027 இலக்கை விட இரண்டு ஆண்டுகள் முன்னதாக உள்ளது கூடுதல் சிறப்பாகும். புதிய இந்தியா கல்வியறிவுத் திட்டத்தின் (NILP) கீழ், நவம்பர் 2025-ல் இறுதி மதிப்பீட்டை DNFE அமைப்பு நடத்த உள்ளது. இது தமிழ்நாட்டின் கல்வி முன்னேற்றத்தில் முக்கிய மைல்கல்லாக அமைகிறது.
ஏழு வயதுக்கு மேற்பட்ட ஒருவர், இரண்டாம் வகுப்பு மாணவர்கள் அளவில் படிக்க, எழுத, மற்றும் அடிப்படை கணிதம் அறிவு பெற்று இருந்தால் அவர் செய்ய முடிந்தால் அவர் கல்வியறிவை பெற்று இருப்பவர் கல்வியறிவை என கருதப்படுவார். ஒரு மாநிலம் 95% கல்வியறிவை எட்டும்போது முழு கல்வியறிவு அறிவிக்கப்படுகிறது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் 2022-27 வரை இயங்கும் NILP, வயது வந்தோருக்கு கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் கல்வியறிவு விகிதம் 80.09% ஆக இருந்தது.
கடந்த 14 ஆண்டுகளில், வடக்கு மாவட்டங்களில் கவனம் செலுத்திய முயற்சிகளால், பல மாவட்டங்கள் 95% கல்வியறிவு இலக்கை கடந்துள்ளன. DNFE இயக்குநர் எஸ். நாகராஜ முருகன், "நவம்பர் மதிப்பீட்டின் பின்னர், மாநிலம் முழு கல்வியறிவை பெற்று இருப்பதாக அறிவிக்கும்" என உறுதியளித்தார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications