தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தத் திட்டம் (SIR) பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டு முடிந்துள்ளன. இதைத் தொடர்ந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்ததன்படி, இந்த திருத்தத்தில் 97.4 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இந்த திருத்த பணியில் இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், பலமுறை பதிவு செய்தவர்கள், காணாமல் போனவர்கள் போன்றோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் வாக்களிக்கும் உரிமை சரியானவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட 97.4 லட்சம் பெயர்களில் 54 சதவீதம் (53 லட்சம்) முகவரி மாறியவர்கள். 28 சதவீதம் (27 லட்சம்) இறந்தவர்கள். 14 சதவீதம் (13.6 லட்சம்) காணாமல் போனவர்கள் அல்லது தொடர்பு இல்லாதவர்கள். 4 சதவீதம் (3.98 லட்சம்) பலமுறை பதிவு செய்தவர்கள். மீதமுள்ளவை வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பித்து பெயரை சேர்க்க முடியும்.
சென்னை, கோயம்புத்தூர் முன்னிலை
சென்னையில் மட்டும் 14 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூரில் 6.5 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் கவுண்டம்பாளையம் தொகுதியில் 1.23 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிகம். சோழிங்கநல்லூர் தொகுதியில் 2.18 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
உங்கள் பெயரை செக் செய்வது எப்படி..?
வரைவு பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை ஆன்லைனில் எளிதாக சரிபார்க்கலாம். தேர்தல் ஆணைய இணையதளம் https://electoralsearch.eci.gov.in ஐ பயன்படுத்தவும்.
தமிழ் மொழியை தேர்வு செய்து, வாக்காளர் அடையாள அட்டை எண் (EPIC) கொடுத்து தேடலாம்.
இல்லையெனில் பெயர், தந்தை பெயர், வயது, முகவரி கொடுத்து தேடலாம்.
மொபைல் எண் கொடுத்தும் தேட முடியும். கேப்ட்சா உள்ளிட்டு தேடினால் முடிவு தெரியும்.


Click it and Unblock the Notifications