தமிழ்நாடு அரசு மாநிலத்தின் பொருளாதாரத்தை 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தும் இலக்கை அடைய வேண்டும் என்ற முக்கிய குறிக்கோள் உடன் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு இயங்கி வருகிறது. இந்த இலக்கை எட்டுவதற்கும், தமிழ்நாட்டில் உயர் தொழில்நுட்ப துறையில் வேகமாக முன்னேற வேண்டும் என்பதற்காக இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விண்வெளித் துறைக்கான கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 'தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை 2025'க்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதலீடு செய்யும் விண்வெளி துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளும், மானியங்களும் தமிழ்நாடு அரசு இந்த கொள்கை வாயிலாக வழங்க உள்ளது.

இந்த கொள்கை ஒப்புதலுக்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய டிஆர்பி ராஜா பல்வேறு முக்கியமான தகவல்களைப் பகிர்ந்தார். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் நம்பர்-1 மாநிலமாகத் திகழ்கிறது, இதை இப்பொழுது அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும் என்ற முயற்சியில் ஸ்பெஸ் டெக் துறையை இலக்காக வைத்து அட்வான்ஸ் டெக் பிரிவில் கவனத்தை தெலுத்த உள்ளோம் என தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.
முதலீடும் வேலைவாய்ப்பு: தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை 2025 மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளித் துறையில் 10,000 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்ப்பதும், குறைந்தபட்சம் 10,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கு இலக்கு கொண்டுள்ளது என அமைச்சர் டிஆர்பி ராஜா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
திறன் வாய்ந்த ஊழியர்கள்: இதேபோல் இந்த கொள்கை மூலம் தமிழ்நாட்டில் விண்வெளித் துறைக்குத் தகுதியான பட்டதாரிகளையும், ஊழியர்களையும் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.
சேவை துறை இலக்கு: மேலும் அமைச்சர் டிஆர்பி ராஜா பேசுகையில் பொதுவாகத் தமிழ்நாட்டின் கொள்கைகள் உற்பத்தித் துறையில் அதிகம் செலுத்தக்கூடியதாக இருக்கும், ஆனால் இந்த முறை ஸ்பேஸ் டெக் பிரிவில் சேவை பிரிவின் மீதும் நம்முடைய கவனம் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இக்கொள்கை வடிவமைக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது என கூறினார்.
ஸ்டார்ட்அப்: இந்த கொள்கையின் மூலம் 25 கோடி ரூபாயில் முதலீட்டில் இயங்கும் சின்ன கம்பெனி அதாவது ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் ஊக்கம் வழங்கப்பட உள்ளது நிறைய முக்கியமான ஒரு அம்சம் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார். இந்த கொள்கை மூலம் இந்திய மற்றும் உலகளாவிய Space Race-ல் தமிழ்நாடும் இணைந்துள்ளது.
காப்புரிமை: இந்த பாலிசியில் தமிழ்நாட்டில் இயங்கும் ஒரு நிறுவனம் பேடென்ட் வாங்குவதற்கான செலவில் 50 சதவிகிதம் அரசாங்கமே கொடுக்கும், 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஸ்பெஷல் பேகேஜ் உருவாக்கியிருக்கிறோம்.
Space Bay: அதேபோல தமிழகத்தில் ஒரு சில இடங்களில் டைடல் பார்க் போல் ஸ்பேஸ் பே - Space Bay என்று அறிவிக்கப்பட்டு அந்த இடத்தில் முதலீடுகள் வருமேயானால் அங்கு வரும் நிறுவனங்களுக்கும் ஸ்பெஷல் பேகேஜ் கொடுக்கும் வசதியும் இந்த பாலிசியில் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஊதியத்தில் மானியம்: இவை அனைத்தையும் விட முக்கியமாகத் தமிழ்நாட்டில் ஸ்பெஸ் டெக் துறையில் (உற்பத்தி / சேவை துறை) முதலீடு செய்து அலுவலகம் அல்லது தொழிற்சாலை அமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு, ஊதியத்தில் மானியம் வழங்கப்பட உள்ளது.
அதாவது ஸ்பேஸ்டெக் நிறுவனங்கள் தனது ஊழியர்களுக்கும் சம்பளத்தில் மானியமாக முதலாமாண்டு 30% இரண்டாமாண்டு 20% அதக்கு அடுத்து மூன்றாம் ஆண்டு 10 சதவீதம் அளவிலும் மானியம் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஸ்பேஸ் டெக் துறைக்கு இது ஒரு பொன்னான நாள் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.
இந்த கொள்கை தமிழ்நாட்டில் விண்வெளி தொடர்பான தொழில்களின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்குச் சாதகமான சூழலை உருவாக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இத்துறையில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி முதலீடுகளை ஈர்க்கவும், புதுமைகளை ஊக்குவிக்கவும் வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. இ
இந்த கொள்கையின் முக்கிய நோக்கம், தமிழகத்தின் அதிநவீனத் துறைகளில் உள்ள திறன்களை மேம்படுத்துவது மற்றும் எதிர்காலத்தில் உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் தான்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications