தமிழ்நாட்டில் அமைக்கப்பட இருக்கும் தங்களுடைய ஆலைகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான வாகனங்களையும் தயாரித்து ஏற்றுமதி செய்வோம் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிரிட்டனை சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனமும் இணைந்து அண்மையில் தான் தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தங்களுடைய வாகன உற்பத்தி ஆலையை நிறுவின.

இந்த ஆலையில் டாடா மோட்டார்ஸ் மட்டுமில்லாமல் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்திற்கான கார்களும் தயாரிக்கப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான பாலாஜி தெரிவித்துள்ளார். தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மின்சார வாகனத்திலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டின் நிதி அறிக்கையை வெளியிட்டு பாலாஜி பேசினார். இந்தியா மட்டுமில்லாமல் உலகிற்கே தேவையான வாகனங்கள் தமிழ்நாட்டில் இருக்கும் தங்களுடைய ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.
அதற்போது சென்னையில் இயங்கி வரக்கூடிய டாடா மோட்டார்ஸ் ஆலையில் மின்சார வாகனங்களின் உற்பத்திக்கு கவனம் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் 2032 ஆம் ஆண்டுக்குள் இந்த ஆலை அனைத்து வகையான வாகனங்களையும் தயாரிக்க கூடிய ஆலையாக மாற்றப்படும் எனக் கூறியுள்ளார்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பாக தமிழ்நாடு அரசோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாகன உற்பத்தி ஆலை நிறுவப்பட்டுள்ளது. இதற்காக 9,000 கோடி ரூபாயை இந்த நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 5,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என சொல்லப்படுகிறது.
இந்த ஆலையில் டாடா மோட்டார்ஸ் மட்டுமில்லாமல் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்திற்கு தேவையான கார்களும் தயாரிக்கப்படும், இங்கே தயார் செய்யப்படும் கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்பதை பாலாஜி மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தி உள்ளார்.
மேலும் தங்களுடைய நிறுவனம் தற்போது மின்சார வாகனங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் 'Battery-as-a-Service (BaaS) என்ற பிரிவிலும் டாடா மோட்டார் செயல்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டதற்கு இந்த சமயத்தில் அதனை கூற முடியாது ஆனால் எதிர்காலத்தில் வாய்ப்பு இருக்கிறது என்பதை அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் சரக்கு போக்குவரத்திலும் மின்சார வாகன பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தி மற்றும் பேட்டரி சேவை சார்ந்த தொழில்களின் தேவையும் உயர்ந்துள்ளது. எனவே டாடா நிறுவனம் அதில் கால்பதிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications