இந்தியாவின் "டெட்ராய்ட்" என்றும் அழைக்கப்படும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பகுதியை வகிக்கும் ஆட்டோமொபைல் துறை தற்போது புதிய பரிமாண வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கத் துவங்கியுள்ளது. உலகளாவிய மின்சார வாகன (EV) உற்பத்தியில் முன்னணி இடத்தைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக மாநில அரசுப் பணியாற்றி வருகிறது. மத்திய அரசும், பிற மாநில அரசுகளுக்கு முன்பாகவே EV துறையில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தியது தான் இந்த வெற்றிக்கு முக்கியமான காரணமாக உள்ளது.
தமிழ்நாட்டில் வின்பாஸ்ட், டாடா மோட்டார்ஸ்-ஜேஎல்ஆர், ஹூண்டாய் மற்றும் போர்டு மோட்டார் போன்ற முக்கிய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க முதலீடுகளை மாநிலத்தின் EV துறையில் செய்துள்ளதே இதற்கான சான்று.

தமிழ்நாட்டின் EV மையங்கள்: இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, சேலம் மற்றும் சென்னை ஆகிய ஆறு நகரங்களை EV மையங்களாக உருவாக்கியுள்ளது. இந்த நகரங்களில் திறமையான தொழிலாளர்கள், துணை சப்ளையர்களின் நெட்வொர்க் மற்றும் சப்ளை செயின், வலுவான ஆட்டோ மற்றும் ஆட்டோ உதிரிப்பாகங்கள் உற்பத்தி சுற்றுச்சூழல் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் லோஜிஸ்டிக்ஸ் அமைப்புகள் என சகலமும் ஈவி துறைக்குச் சாதகமாக உள்ளது.
வெற்றிக்கான அடிப்படை காரணம்: EV துறையில் அதிகப்படியான முதலீடுகள் பெற முக்கிய காரணமாக இருந்தது தமிழ்நாடு அரசின் சாதகமான தொழில்துறை கொள்கைகள், திறமையான தொழிலாளர்கள் தான். தமிழ்நாடு தற்போது இந்தியாவின் EV உற்பத்தியில் சுமார் 40% பங்கைக் கொண்டுள்ளது, இதில் இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் அடங்கும். குறிப்பாக, இந்தியாவின் முதல் ஐந்து EV உற்பத்தியாளர்களில் மூன்று தமிழ்நாட்டில் அமைந்துள்ளன.
இருசக்கர வாகனத் துறையில் வலுவான இடத்தை பிடித்த நிலையில் தற்போது, தமிழ்நாடு அரசு பயணிகள் வாகனங்களிலும் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தனது சென்னை தொழிற்சாலையில் EV வாகனங்கள் பிரிவுக்காக ரூ.20,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு EV முதலீடுகள் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளன, டாடா மோட்டார்ஸ்-ஜேஎல்ஆர், வின்பாஸ்ட், ராயல் என்ஃபீல்ட், ஹூண்டாய் மற்றும் ஸ்டெலான்டிஸ் ஆகியவை பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
ஏப்ரல் மாதம், இந்தியாவில் உள்ள முன்னணி பன்னாட்டு கார் உற்பத்தியாளரான சிட்ரோன், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் Ë-C3 எலக்ட்ரிக் வாகனங்களைச் சர்வதேசச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்திய ஆட்டோமொபைல் துறையில் தமிழ்நாடு புதிய வரலாறு சாதனை படைத்தது.
வளர்ந்து வரும் சுற்றுச்சூழல்: EV தொழிலில் தமிழ்நாட்டின் வெற்றிக்குப் பங்களிக்கும் ஒரு முக்கிய காரணியாகப் பார்க்கப்படுவது, ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் உற்பத்தி செய்யும் 1,500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருப்பது பெரும் பலம்.
ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் உற்பத்திக்குச் சென்னை, கோவை, ஓசூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைக்கு முக்கிய பங்கீட்டை வகிக்கிறது.
இதனிடையே செப்டம்பர் 28 அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கத்தில் டாடா மோட்டார்ஸ்-ஜேஎல்ஆர் இன் புதிய தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டப்போகிறார். இதன் மூலம் இந்தியாவில் முதல் முறையாக உயர்தர வாகனம் தயாரிக்கப்படுகிறது.
இப்படி படிப்படியாக வளர்ந்து தமிழ்நாடு EV துறையில் அசைக்க முடியாத சக்தியாக மாறி வருகிறது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications