இந்தியாவின் இன்னோவேஷன் மற்றும் இன்வென்ஷன் பிரிவில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. 2024-25ஆம் ஆண்டில் மாநில வாரியாக பேடென்ட் விண்ணப்பங்கள் செய்ததில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. மொத்தம் 15,440 விண்ணப்பங்கள் தாக்கல் செய்து அசத்தியுள்ளது.
இது இந்தியாவின் மொத்த பேடென்ட் விண்ணப்பங்களில் தமிழ்நாட்டின் பங்கு மட்டும் 23 சதவீதம் ஆகும். இந்தியாவின் மொத்த பேடென்ட் விண்ணப்பங்கள் 66,673 ஆக உள்ள நிலையில் தமிழ்நாடு மட்டும் 15,440 விண்ணப்பங்கள் தாக்கல் செய்துள்ளது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் 61 சதவீதம் அதிகம் என்பது தான். இது தமிழ்நாட்டின் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை காட்டுகிறது.
உற்பத்தி மற்றும் சேவை துறையில் சிறப்பான வளர்ச்சியை கண்டு வரும் தமிழ்நாடு கடந்த 1-2 வருடமாக ஹைய் டெக் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், இன்னோவேஷன் மற்றும் இன்வென்ஷன் பிரிவில் இயங்கும் நிறுவனங்களுக்கும் முக்கியதுவம் கொடுத்து வருகிறது. இதன் விளைவாக பேடென்ட் விண்ணப்பங்களில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வெறுமென உற்பத்தி மற்றும் சேவை துறை போதுமானது கிடையாது, இன்னோவேஷன் மிகவும் முக்கியம் என்பதை பல நாடுகள் நிரூபணம் செய்துள்ளது. உதாரணமாக ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவை இன்னோவேஷன் அடிப்படையில் தான் நீண்ட காலமாக வேகமான வளர்ச்சி அடைந்த நாடாக உள்ளது. இதை பின்பற்றி தற்போது சீனா தற்போது இன்னோவேஷனில் முன்னிலை வகிக்கிறது. இதை பாதையை தான் தமிழ்நாடு பின்பற்றுகிறது.
மாநில வாரியான விபரம்
தமிழ்நாடு 15,440 விண்ணப்பங்களுடன் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா 8,371, மகாராஷ்டிரா 7,893, உத்தரப் பிரதேசம் 5,703, பஞ்சாப் 4,461 விண்ணப்பங்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ள கர்நாடகாவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிக விண்ணப்பங்கள் தாக்கல் செய்துள்ளது.
இது மாநிலத்தின் ஆராய்ச்சி திறனை வெளிப்படுத்துகிறது. டீப் டெக், மின்னணு, உற்பத்தி, பயன்பாட்டு ஆராய்ச்சி ஆகிய துறைகளில் தமிழ்நாடு முன்னேறியுள்ளது.
தமிழ்நாட்டில் பேடென்ட் விண்ணப்பங்கள் அதிகரிப்புக்கு ஆராய்ச்சி முதலீடு, தொழில்நுட்ப பூங்காக்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை அடிப்படை காரணமாக உள்ளது. இந்த கட்டணைப்பு தான் திறன்வாய்ந்தவர்களின் யோசனைகளை அறிவுசார் சொத்தாக மாற்றுகிறது. இந்த வளர்ச்சி தமிழ்நாட்டை இந்தியாவின் இன்னோவேஷன் இன்ஜின் ஆக மாற்றுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications