2023-24 நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் தமிழகத்தின் மொத்த ஏற்றுமதி 24.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து உள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்தியாவிலேயே 3வது பெரிய ஏற்றுமதி மாநிலமாக உள்ளது. குஜராத் முதல் இடத்தையும், மகாராஷ்டிரா 2வது இடத்தையும் பிடித்திருக்கும் வேளையில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் தமிழ்நாட்டில் செய்யப்பட்ட ஏற்றுமதி, கடந்த ஆண்டின் மொத்த ஏற்றுமதியில் 62% ஆகும். இதன் மூலம் இந்த ஆண்டு 50 பில்லியன் டாலர் அளவீட்டை தொட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து அதிகம் மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் டாப் 5 இடங்களை பிடித்தது பொறியியல் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஜவுளிகளின் ஆயத்த ஆடைகள், பருத்தி நூல், கைத்தறி பொருட்கள், தோல் மற்றும் தோல் உற்பத்தியாளர்கள்.
2023-24 நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் ஒட்டுமொத்த இந்தியாவும் சுமார் 244.89 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ள நிலையில் தமிழ்நாட்டின் பங்கீடு மட்டுமே 10 சதவீதம்.

முதல் இடத்தில் இருக்கும் குஜராத் 32.16 சதவீதத்துடன் 77.132 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்துள்ளது. குஜராத் மாநிலத்தில் அதிகம் ஏற்றுமதி செய்துள்ள பொருட்கள் என பார்த்தால், மொத்த ஏற்றுமதியில் 47.61 சதவீத பங்கீட்டை வகிப்பது பெட்ரோலியம் பொருட்கள் தான். எல்லா புகழும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு மட்டுமே.

குஜராத் மாநிலத்தில் பெட்ரோலியம் பொருட்களை தாண்டி இன்ஜினியரிங் கூட்ஸ், ஆர்கானிக் மற்றும் இன்ஆர்கானிக் கெமிக்கல், ரத்தினம் மற்றும் நகைகள், மருத்து பொருட்கள் டாப் 5 இடங்களை பிடித்துள்ளது. 3வது இடத்தில் இருக்கும் மகாராஷ்டிரா முதல் 6 மாத்தில் 38.54 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூர் ரியல் எஸ்டேட்: 3 வருடத்தில் டபுள் மடங்கு வளர்ச்சி.. இந்த ஏரியா பக்கமே போக முடியாது போலியே..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications