தமிழ்நாடு அரசு புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கான முறையில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை அறிவித்திருக்கிறது . இதன் மூலம் டிசம்பர் ஒன்றாம் தேதியான இன்று முதல் தமிழ்நாட்டில் புதிதாக பைக் மற்றும் கார் வாங்கும் நபர்களுக்கு 5000 ரூபாய் வரை சேமிப்பு ஏற்படும்.
தமிழ்நாட்டில் 150 க்கும் மேற்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன . ஓட்டுனர் உரிமம் வழங்குவது , வாகனங்களை பதிவு செய்வது உள்ளிட்ட பணிகள் இங்கே மேற்கொள்ளப்படுகின்றன . பொதுவாக நாம் புதிதாக ஒரு வாகனம் வாங்குகிறோம் என்றால் அந்த வாகனத்தை ஆர்டிஓ அலுவலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் , அங்கே அந்த வாகனம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னர் அதற்கான பதிவு எண் உள்ளிட்டவை ஒதுக்கப்படும்.

வழக்கமாக நாம் வாகனம் வாங்க கூடிய டீலர்களே இந்த வேலையை முடித்து கொடுப்பார்கள். ஆனால் இதற்காக ஆர்டிஓ கட்டணம் என்ற பெயரில் இருசக்கர வாகனங்களுக்கு 1500 ரூபாயிலிருந்து 2500 ரூபாயும், கார்களுக்கு 5000 ரூபாயும் நம்மிடம் கட்டணமாக வசூல் செய்யப்படும் . இல்லை என்றால் தனிப்பட்ட முறையில் நாம் அந்த வாகனத்தை ஆர்டிஓ அலுவலகத்திற்கு கொண்டு பதிவுக்காக காத்திருக்க வேண்டும்.
ஆனால் தற்போது அந்த பணமும் நேரமும் இந்த புதிய விதிமுறை மூலம் சேமிப்பாக மாறி இருக்கிறது. சொந்த பயன்பாட்டுக்காக வாங்கப்படும் புதிய வாகனங்களை பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு அல்லது யூனிட் அலுவலகங்களுக்கு இனி அந்த வாகனங்களை கொண்டு வர தேவை இல்லை என தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்த நடைமுறை டிசம்பர் ஒன்றாம் தேதியான இன்று முதல் அமலுக்கும் வந்துவிட்டது .
மோட்டார் வாகன புதிய சட்ட திருத்தத்தின்படி சொந்த பயன்பாட்டுக்கு வாங்கக்கூடிய வாகனங்களின் பதிவின் போது அவற்றை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு செல்ல தேவையில்லை என்ற பிரிவு இடம் பெற்றுள்ளது. ஆனால் இது தமிழ்நாட்டில் நடைமுறைக்கு கொண்டு வராமலேயே இருந்தது . ஆட்டோ மொபைல் டீலர்கள் சங்கம் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உயர்நீதிமன்றம் இந்த சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டது . இதன்படி இன்று முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்திருக்கிறது.
எனவே சொந்த பயன்பாட்டிற்காக இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்டவற்றை வாங்கும்போது அவற்றை பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் கொண்டு செல்ல தேவையில்லை . இந்த உத்தரவை தமிழக போக்குவரத்து துறை ஆணையர் கஜலட்சுமி பிறப்பித்துள்ளார். இது தற்போது நடைமுறைக்கும் வந்திருக்கிறது. இதன் மூலம் வாகனத்தை விற்பனை செய்யும் டீலர்கள் வாடிக்கையாளர்களின் ஆவணங்களை வாஹன் இணையதளம் மூலம் பதிவேற்றி பதிவு கட்டணம் மற்றும் சாலை வரியை செலுத்தி ஆன்லைனிலேயே பதிவை முடித்து விடுவார்கள்.
வாடிக்கையாளரின் ஆதார் விவரங்கள் மூலம் அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பதிவு எண் தானாகவே ஒதுக்கப்பட்டு விடும் . எனவே வாகனம் புதிதாக பைக் கார் வாங்கக்கூடிய நபர்களை பொறுத்தவரை தாங்கள் தனிப்பட்ட முறையில் அல்லது டீலர்கள் மூலமாகவோ வாகனத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கும் அல்லது யூனிட் அலுவலகத்திற்கோ கொண்டு சென்று வரவேண்டும் என்று அலைச்சல் கிடையாது . குறிப்பாக பதிவு கட்டணம் என்ற ஒன்றை டீலர்களுக்கு வழங்க வேண்டாம்.
மேலும் வாகன விற்பனை நிறுவனங்களை பொறுத்தவரை புதிதாக வாகனத்தை ஆர்டிஓ அலுவலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் ,அதற்கான போக்குவரத்து செலவு , பணியாளரை அதற்காக ஒதுக்க வேண்டும் ,நேர விரையம் உள்ளிட்டவை இனி கிடையாது .வாகன பதிவு எளிமையாகப்பட்டிருப்பது மட்டுமில்லாமல் விரைவாக வாடிக்கையாளரிடம் அதனை டெலிவரி செய்ய முடியும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications