இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் ஒரு சில மாநிலங்கள் மட்டுமே அதிகப்படியான பங்கீட்டை அளித்து வருகிறது. ஏற்கனவே நாம் அறிந்தது போல் இந்திய பொருளாதாரத்தில் பெரும் பகுதி பங்கீட்டை தென்னிந்தியாவின் 5 மாநிலங்கள் மட்டுமே அளிக்கிறது. இந்த நிலையில் அதற்கு அடுத்த மகுடமாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தென்னிந்தியாவில் மாநிலங்கள் கடந்த 3 வருடத்தில் பெரிய அளவிலான வளர்ச்சியை எட்டிப்பிடித்துள்ளது, குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்களையும், முதலீட்டு அமைப்புகளையும் நேரடியாக தொடர்பு கொண்டு முதலீட்டை ஈர்த்து வருகிறது. இந்த மாபெரும் முயற்சியின் பலன்கள் தற்போது அளிக்க துவங்கியுள்ளது உற்பத்தி, வளர்ச்சி, வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, வர்த்தகம் என அனைத்து முனைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது தென்னிந்திய மாநிலங்கள்.

இந்த நிலையில் நித்தி அயோக் அமைப்பின் முன்னாள் சிஇஓ-வான அமிதாப் கான்ட் அடுத்த 2 வருடத்தில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்பீட்டை அடையும் எனவும், இந்தியாவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்பீட்டு கனவில் தமிழ்நாடு மற்றும் கர்நாடாகா முக்கிய பங்கு வகிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உருவெடுக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேக் இன் இந்தியா திட்டத்தில் தென்னிந்தியாவின் பங்கீடு குறித்து இந்தியாடூடே கான்கிலேவ் சௌத் 2023 நிகழ்ச்சியில் அமிதாப் கான்ட் கூறுகையில், அடுத்த 2 வருடத்தில் தமிழ்நாடு, கர்நாடகா பொருளாதாரம் 1 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை பெறும், இதனோடு இந்தியா 5 டிரில்லியன் அதை தொடர்ந்து 10 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்பீட்டை நோக்கி ஓடும். இதில் தென்னியாந்தியாவின் பங்கீடு மிகவும் அதிகமாகும் என அமிதாப் கான்ட் தெரிவித்தார்.
இது மட்டும் அல்லாமல் இந்திய ஜிடிபி-யில் சுமார் 30 சதவீத பங்கீட்டை தென்னிந்தியா மட்டும் அளிக்கிறது. இதோடு இந்தியாவின் சராசரி தனி நபர் வருமானத்தை காட்டிலும், நாட்டின் பிற பகுதி தனிநபர் வருமானத்தை காட்டிலும் தென்னிந்திய பகுதி மக்களின் தனிநபர் வருமானம் மிகவும் அதிகம் என்பதையும் அமிதாப் கான்ட் கூட்டதில் பேசினார். தென்னிந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் ஒரு பிரிவில் சிறந்து விளங்குகிறது என்றும் அமிதாப் கான்ட் தெரிவித்தார்.
தமிழ்நாடு உற்பத்தியில் அசத்துகிறது, தெலுங்கானா பார்மா துறையில் அசத்துகிறது, இந்திய பார்மா துறையில் சுமார 35 முதல் 40 சதவீதம் தெலுங்கானாவில் இருந்து வருகிறது. கேரளா சுற்றுலா துறை, கர்நாடகா சேவை துறை, ஆந்திர பிரதேசம் உற்பத்தி மற்றும் பார்மா துறையில் அதிகப்படியான வர்த்தகத்தை கொண்டு தற்போது கிரீன் எனர்ஜி துறையில் அதிகப்படியாக கவனத்தை செலுத்துகிறது என புட்டு புட்டு வைத்தார் அமிதாப் கான்ட்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications